நோன்பின் நிய்யத்
நோன்பின் நிய்யத்
அளவற்ற அருளாளனும் கருணையன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் ஆரம்பம் செய்கிறேன்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹூ.
நிய்யத் என்ற அரபுச் சொல்லுக்கு எண்ணம் , தீர்மானம் , உறுதி போன்ற சொற்பொருள்கள் உள்ளது. இதற்கு இஸ்லாமிய வழக்கில் உள்ளத்தில் கொள்ளும் உறுதி என்று பொருள் கூறப்படும் . உதாரணமாக தொழுகை , உளூ , நோன்பு போன்ற வணக்க வழிபாடுகள் புரியும் போது அதை மனதில் உறுதிகொள்ள வேண்டும் . இதற்கே ' நிய்யத் ' என்பர் . இதை வாயால் மொழிதல் தவறாகும் நிய்யத்தை வாயால் மொழிவது என்பது மார்க்கமாக்கப்படவில்லை. இது அல்லாஹ்வுடைய தூதரிடமிருந்தோ ஸஹாபாக்களிடமிருந்தோ தாபியீன்களிடமிருந்தோ வந்ததாக அறியப்படவுமில்லை. எனவே, எவர் சப்தமிட்டு நிய்யத்தை மொழிகிறாரோ அவர் அல்லாஹ்வுடைய தூதரும் ஸஹாபாக்களும் செய்யாத ஒரு காரி யத்தை செய்தவராவார். இதனை பித்அத் என்று கூறப்படும்.
மனதில் கொள்ளும் எண்ணமே " நிய்யத் ' ஆகும் .
ஸஹீஹ் புகாரி : 54
'செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொறுத்தே அமைகின்றன. ஒவ்வொரு மனிதருக்கும் அவர் எண்ணியதுதான் கிடைக்கிறது. என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என உமர்(ரலி) அறிவித்தார்.
நோன்பின் நிய்யத் என்று இந்தியாவில் அரபியில் மற்றும் தமிழ் மொழி பெயர்ப்பு போன்றவை சொல்லி தரப்பட்டு அதை பின்பற்றுவது நடைமுறையில் உள்ளது. அந்த நிய்யத்தின் தமிழ் அர்த்தத்தை புரிந்து படித்தாலே அது தவறானது என்பதை புரிந்து கொள்ளலாம்.
👇🏾👇🏾👇🏾
நவைது ஸவ்மகதின் அன் அதாயி ஃபர்ளி ரமளானி ஹாதி ஹிஸ்ஸனதி லில்லாஹிதஆலா ...
இந்த வருடத்தின் ரமளான் மாதத்தின் ஃபர்ளான நோன்மை அதாவாக அல்லாஹுத்தஆலாவுக்காக நாளை நோற்க நிய்யத் செய்கிறேன்.
ஸஹர் நேரத்தில் உணவை சாப்பிட்டு விட்டு
ரமாளன் மாதத்தின் பர்லான நோன்பை அதாவாக நாளைப் பிடிக்க நிய்யத் செய்கிறேன் என்றால் இதன் பொருள் என்ன என்பதை நாம் சிந்திக்க வேண்டும்..
ஸஹர் நேரத்திற்கு பின் ஃபஜ்ர் ஆரம்பமாகிறது. எனவே பர்லான நோன்பை இன்று பிடிக்கிறேன் என்று தானே நிய்யத் வைக்க வேண்டும். இதில் இருந்து புரிந்து கொள்ளலாம் இது தவறாக புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது என்று.
ஸஹீஹ் புகாரி : 2697
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நம்முடைய இந்த (மார்க்க) விவகாரத்தில் அதில் இல்லாததைப் புதிதாக எவன் உண்டாக்குகிறானோ அவனுடைய அந்தப் புதுமை நிராகரிக்கப்பட்டதாகும்.
என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
எனவே அல்லாஹ்வும் , அவனது தூதரும் காட்டித் தந்த முறைப்படி மனதால் நோன்பு நோற்பதாக உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும்.
நோன்பு திறக்கும்போது ஓதும் துஆ
அல்லாஹும்ம லகசும்து வபிக ஆமன்து வஅலைக தவக்கல்து வஅலா ரிஸ்கிக அஃப்தர்து பதகப்பல்மின்னி .
யா அல்லாஹ் ! உனக்காகவே நோன்பு வைத்தேன் , உன்னைக் கொண்டே விசுவாசம் கொண்டேன் , உன் மீதே நம்பிக்கை வைத்தேன் , உன்னுடைய இரணம் கொண்டே நோன்பு திறக்கின்றேன் என்னுடைய நோன்பை ஏற்றுக் கொள்வாயாக ...
மேலும் நோன்பு திறக்கும் துஆ என்ற செய்தி..
அல்லாஹம்ம லக ஸம்து வஅலா ரிஸ்கிக அப்தர்து
’(அபூதாவூத்-2358,)ஹதீஸ் களில் பதிவு செய்யப்பட்டிருந்தாலும் அறிவிப்பாளராக முஆத் பின் ஸஹ்ரா’ என்பவர் இடம் பெறுகிறார். மேலும் நபி (ஸல்)அவர்கள் இந்த துஆவை ஓதியதாக அறிவிக்கிறார். இவர் நபித்தோழர் அல்ல. நபி (ஸல்)அவர்கள் தொடர்பான செய்தியை நபி (ஸல்) அவர்களைச் சந்திக்காத நபர் அறிவிப்பதை நாம் ஏற்கக்கூடாது. எனவேஇந்தச் செய்தி பலவீனம் அடைகிறது.மேலும் சில ஹதீஸ்களில் இடம் பெறும் செய்திகளிலும் பலவீனமான அறிவிப்பாளர்கள் இடம் பெறுவதால் பலஹீனங்களின் தொகுப்பே இந்த துஆ ஆகும்.
மேலும்
நபியவர்கள் நோன்பு திறக்கும் போது ‘தஹப்பல்லமஉ வப்தல்லதில் உரூகு வஸபதல் அஜ்ரு இன்ஷா அல்லாஹ்’ என்று கூறுவார்கள். (அபூதாவூத் – 2357)
இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் வரிசையிலே மர்வான் இப்னு ஸாலிம் என்பவர் அறியப்படாதவர்.
என்பதால் இந்த செய்தியும் பலஹீனமானதாகும்.
எனவே நாம் அனைவரும் நபிமொழியின் அடிப்படையில் உணவு உண்ணும் முன் கூறும் பிஸ்மில்லாஹ் என்று சொல்லி நோன்பை திறக்கலாம்.
ஸஹீஹ் புகாரி : 3461
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
என்னிடமிருந்து ஒரேயொரு (சிறு) செய்தி கிடைத்தாலும் சரி, அதைப் பிறருக்கு எடுத்துரையுங்கள். பனூ இஸ்ராயீல்களின் வாயிலாகக் கிடைத்த செய்திகளையும் அறிவியுங்கள். அதனால் குற்றமில்லை. எவன் என் மீது (நான் சொன்னதாக) வேண்டுமென்றே பொய்யுரைக்கிறானோ அவன் தன் இருப்பிடத்தை நரகத்தில் அமைத்துக் கொள்ளட்டும்.
என அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹூ.
Masha Allah congratulations
ReplyDelete