ஸதகா ஜாரியா - இஸ்லாம்

ஸதகா ஜாரியா - இஸ்லாம் 





அளவற்ற அருளாளனும் கருணையன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் ஆரம்பம் செய்கிறேன்.



அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹூ.



ஸதகா ஜாரியா என்பது , மனிதன் இறந்த பிறகும் தொடர்ந்து நன்மைகளை தரக்கூடிய தானதர்மங்களைச் சார்ந்த  நற்செயல்களாகும். அச்செயல்கள் மனிதர்களுக்கும், உயிரினங்களுக்கும் பயனடைவது நின்று போவது வரை  நன்மைகளும் நின்று போகாது. 



அல்குர்ஆன் : 36:12

நிச்சயமாக மரணமடைந்தவர்களை நாமே உயிர்ப்பிக்கிறோம்; அன்றியும் (நன்மை, தீமைகளில்) அவர்கள் முற்படுத்தியதையும், அவர்கள் விட்டுச் சென்றவற்றையும் நாம் எழுதுகிறோம்; எல்லாவற்றையும், நாம் ஒரு விளக்கமான ஏட்டில் பதிந்தே வைத்துள்ளோம்.  


ஸஹீஹ் முஸ்லிம் : 3358

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மனிதன் இறந்துவிட்டால் அவனுடைய மூன்று செயல்களைத் தவிர மற்ற அனைத்தும் நின்றுவிடுகின்றன; 

1.நிலையான அறக்கொடை

(ஸதகா ஜாரியா) 

 2. பயன்பெறப்படும் கல்வி

 3. அவனுக்காகப் பிரார்த்திக்கும் (அவனுடைய) நல்ல குழந்தை.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.



இப்னுமாஜா : 242 

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள் : " ஒரு முஃமினான மனிதன் கற்பித்த கல்வியும் , ( எழுத்து மூலம் நூல்வடிவில் உலகெங்கும் ) அவன் பரப்பிய கல்வியும் , அவன் விட்டுச்சென்ற ஸாலிஹான பிள்ளைகளும் , ( பள்ளிவாசல்கள் , மத்ரஸாக்களுக்கு ) வாரிஸாக்கிய குர்ஆன் ஷரீபும் , அவன் கட்டிக்கொடுத்த பள்ளியும் , வழிப்போக்கர்களுக்கு அவன் அமைத்துக் கொடுத்த தங்கும் விடுதியும் , அவன் வாய்க்கால் வெட்டி ஓடச்செய்த ஆறும் , அவன் இப்பூவுலகில் வாழும்போது கொடுத்து உதவிய தானங்களும் கண்டிப்பாக அவனின் மௌத்துக்குப் பிறகும் அவனைப் போய்ச்சேரும். 

அறிவிப்பவர் : ஹழ்ரத் அபூஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு 


பள்ளிவாசல் 

ஸஹீஹ் புகாரி : 450

உபைதுல்லாஹ் அல் கவ்லானி அறிவித்தார்.

உஸ்மான்(ரலி) பள்ளியை விரிவுபடுத்தியபோது 'நீங்கள் மிகவும் விரிவு படுத்தி விட்டீர்கள்' என்று மக்கள் அவர்களிடம் ஆட்சேபனை செய்தார்கள். அதற்கு 'அல்லாஹ்வின் திருமுகத்தை நாடி, பள்ளிவாசல் ஒன்றைக் கட்டியவர் அது போன்ற ஒன்றைச் சுவர்க்கத்தில் அவருக்காக அல்லாஹ் கட்டுகிறான்' என்று நபி(ஸல்) கூற செவியுற்றுள்ளேன்' என உஸ்மான்(ரலி) கூறினார். 


கல்வி

ஸஹீஹ் புகாரி : 1409

 இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இரண்டு விஷயங்களைத் தவிர வேறு எதிலும் பொறாமை கொள்ளக் கூடாது. ஒரு மனிதருக்கு அல்லாஹ் வழங்கிய செல்வத்தை அவர் நல்ல வழியில் செலவு செய்தல்; இன்னொரு மனிதருக்கு அல்லாஹ் அறிவு ஞானத்தை வழங்கி, அதற்கேற்ப அவர் தீர்ப்பு வழங்குபவராகவும் கற்றுக் கொடுப்பவராகவும் இருப்பது (ஆகியவையே அந்த இரண்டு விஷயங்கள்).'

அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார். 



மரம்

ஸஹீஹ் புகாரி : 2320

 இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

முஸ்லிம் ஒருவர் ஒரு மரத்தை நட்டு அல்லது விதைவிதைத்து விவசாயம் செய்து, அதிலிருந்து (அதன் விளைச்சலை அல்லது காய்கனிகளை) ஒரு பறவையோ, ஒரு மனிதனோ அல்லது ஒரு பிராணியோ உண்டால் அதன் காரணத்தால் ஒரு தர்மம் செய்ததற்கான பிரதிபலன் அவருக்குக் கிடைக்கும்.

என அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.



தண்ணீர் 

அஹ்மது நஸயீ : 3666

 நான் நபி ( ஸல் ) அவர்களிடம்   அல்லாஹ்வின் தூதர் அவர்களே ! எனது தாயார் இறந்து விட்டார்கள் . அவர்களுக்காக நான் தர்மம் செய்யலாமா ? ' என்று கேட்டேன் . ' ஆம் ' என நபி ( ஸல் ) அவர்கள் பதில் கூறினார்கள் . ' சரி தர்மத்தில் சிறந்தது எது ? ' என மீண்டும் நான் கேட்டேன் . அதற்கு நபி ( ஸல் ) அவர்கள் ' நீர் புகட்டுவது ' என விளக்கமளித்தார்கள்.     


ஸஹீஹ் புகாரி : 2363

அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

ஒருவர் (ஒரு பாதையில்) நடந்து சென்று கொண்டிருந்தபோது அவருக்குக் கடுமையான தாகம் ஏற்பட்டது. உடனே, அவர் அங்கிருந்த ஒரு கிணற்றில் இறங்கி, அதிலிருந்து தண்ணீரை அள்ளிக் குடித்தார். பிறகு, கிணற்றிலிருந்து அவர் வெளியே வந்தபோது, நாய் ஒன்று தாகத்தால் தவித்து, நாக்கைத் தொங்கவிட்டபடி ஈர மண்ணை நக்கிக் கொண்டிருப்பதைக் கண்டார். அவர் (தம் மனத்திற்குள்) 'எனக்கு ஏற்பட்டதைப் போன்ற அதே (கடுமையான தாகம்) இந்த நாய்க்கும் ஏற்பட்டிருக்கிறது போலும்' என்று எண்ணிக் கொண்டார். உடனே, மீண்டும் கிணற்றில் இறங்கித் தண்ணீரைத் தன்னுடைய காலுறையில் நிரப்பிக் கொண்டு, அதை வாயால் கவ்விக் கொண்டு, மேலே ஏறி வந்து அந்த நாய்க்குப் புகட்டினார். அல்லாஹ் அவரின் இந்த நற்செயலை ஏற்று அவரை (அவரின் பாவங்களை) மன்னித்தான்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

இதைச் செவியுற்ற நபித்தோழர்கள், 'இறைத்தூதர் அவர்களே! கால்நடைகள் (மற்ற பிராணிகளுக்கு உதவும்) விஷயத்திலும் எங்களுக்குப் பலன் கிடைக்குமா?' என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், '(ஆம்;) உயிருடைய பிராணி ஒவ்வொன்றின் விஷயத்திலும் (அதற்கு உதவும் பட்சத்தில் மறுமையில்) அதற்கான பிரதிபலன் கிடைக்கும்' என்று கூறினார்கள். 




எனவே நாம் அனைவரும் ஸதகா ஜாரியா எனும் தர்மத்தை பல வழிகளில் நிறைவேற்றலாம். 

1.பள்ளிவாசல் கட்டுவதற்கு தேவையான நிலம், தேவையான பொருட்கள் மூலமும், மற்றும் குறைந்த பட்சம் ஒரு மனிதன் தொழும் இடத்திற்கு ஆகும் செலவை கொடுத்தாவது பல நன்மைகளை பெற்றுக் கொள்ளலாம். 


2.மதரஸா, கல்வி கூடங்கள், நூலகங்கள், ஆராய்ச்சி கூடங்கள் நிறுவலாம். அல்லது ஒரு குழுவை அமைத்து அதன் மூலம் மக்களின் நிதியை திரட்டி செயல்படுத்தலாம்.மற்றும் குர்ஆன், ஹதீஸ், புத்தகங்கள், வலைத்தளங்கள்,மற்றும் பல வழிகளில்  நம் மார்க்க அறிவை மக்களுக்கு கொண்டு சென்று நன்மைகளை தொடர்ந்து பெற்றுக் கொள்ளலாம். 


3 மரங்களை நடுவி அதன் மூலம் மக்களுக்கு கிடைக்கும் கனிகள், நிழல்கள், மருத்துவ பலன்கள், மற்றும் பல விதங்களில் மக்களுக்கு பயனடையும் வரை நன்மைகளை பெற்றுக் கொண்டே இருக்கலாம். அல்லது விதைப்பந்துகளை ஏரி, குளத்தின் ஓரமாகவும், ஈரப்பதம் உள்ள நிலத்தில் மழைக்கால நேரத்தை அறிந்து வீசி விட்டு சென்றால் மரம் தானாகவே வளர்ந்து நன்மைகளை பெற்றுக் கொடுக்கும். 


4.மக்களுக்கு தண்ணீர் வசதியை இலவசமாக ஏற்படுத்திக் கொடுப்பதன் மூலம் பல நன்மைகளை பெற்றுக் கொள்ள நாம். நம் ஊரிலோ அல்லது காடுகளிலோ ஒரு நிலத்தை விலைக்கு வாங்கி மக்களுக்கு தர்மம் (இனாம்தார்) செய்து அந்த நிலத்தில் கிணறு வெட்டி தர்மம் செய்யலாம்.குலம்,குட்டைகளை தண்ணீர் இல்லாத காரணத்தால் பல நிலங்களை அரசு விற்று விட்டது. அது போன்ற இடங்களை விலைக்கு வாங்கி மறுபடியும் தூர்வாரி குளமாகவோ குட்டையாகவோ ஏற்படுத்தலாம். தண்ணீர் சுத்திகரிப்பு தொழிற்சாலைகளை நிறுவி மக்களுக்கு சுத்தமான குடிநீரை இலவசமாக வழங்கலாம். வறுமையில் வாழும் பகுதிகளில் ஆழ்துளை கிணற்றின் மூலம் தண்ணீர் வசதி, தண்ணீர் குழாய்களை ஏற்படுத்தி தர்மம் செய்து நன்மைகளை பெற்றுக் கொள்ளலாம். 



5.மருத்துவமனை,மருந்தகம், பரிசோதனை மையம், போன்றவை இலவசமாக மக்களுக்கு பயன்பெறும் வகையில் ஏற்படுத்திக் கொடுக்கலாம். இரத்ததானம் செய்யலாம், மற்றும் இரத்ததான வங்கி ஏற்படுத்தி இரத்த தானம் செய்பவருக்கும் நமக்கும் நன்மைகளை தொடர்ந்து பெற்றுக் கொள்ள வழிவகை செய்யலாம். 



மேலும் ஸதகா ஜாரியா (இறந்த பிறகும் தொடரும் நன்மைகள்) பல வழிகளில் நாம் ஏற்படுத்திக் கொள்ளலாம். சில செயல்கள் தனியாக செய்யலாம். சில செயல்களை ஒரு குழுவாகவோ அல்லது ஒரு அமைப்பாகவோ தான் செய்ய இயலும்.நாம் அல்லாஹ்வின் துஆ வின் மூலம் முயற்சி செய்தால் அனைத்தும் எளிதாகவே இருக்கும். நாம் செய்யும் நற்செயல்களை அல்லாஹ்வே அறிந்தவன். அல்லாஹ் நாம் செய்யும் நற்செயல்களுக்கு வாழும் போதும், இறந்த பிறகும் தொடர்ந்து நற்கூலிகளை வழங்க வேண்டும் என்று அல்லாஹ்விடம் துஆ செய்வோம். 



அல்குர்ஆன் : 5:9

ஈமான் கொண்டு. நல்ல அமல்கள் செய்வோருக்கு, மன்னிப்பையும், மகத்தான (நற்)கூலியையும் அல்லாஹ் வாக்களித்துள்ளான்.



மேலும் தாங்கள் அறிந்த

 ஸதகா ஜாரியா ஹதீஸ் மற்றும் நற்செயல்களை கருத்துப்பதிவில் பதிவிடுங்கள்..


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹூ. 





Comments

  1. அல்ஹம்துலில்லா

    ReplyDelete

Post a Comment