மழை - இஸ்லாம்


மழை - இஸ்லாம் 





அளவற்ற அருளாளனும் கருணையன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் ஆரம்பம் செய்கிறேன்.


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹூ.



மழை உருவாகும் விதம் 

அல்குர்ஆன் : 24:43

( நபியே ! ) நீர் பார்க்கவில்லையா ? நிச்சயமாக அல்லாஹ் மேகத்தை மெதுவாக இழுத்து , பின்னர் அவற்றை ஒன்றாக இணையச்செய்து , அதன் பின் அதை ( ஒன்றின் மீது ஒன்று சேர்த்து ) அடர்த்தியாக்குகிறான் ; அப்பால் அதன் நடுவேயிருந்து மழை வெளியாவதைப் பார்க்கிறீர் ; இன்னும் அவன் வானத்தில் மலைகளைப் போன்ற மேகக் கூட்டங்களிலிருந்து பனிக்கட்டியையும் இறக்கி வைக்கின்றான் ; அதைத் தான் நாடியவர்கள் மீது விழும்படிச் செய்கிறான் - தான் நாடியவர்களை விட்டும் அதை விலக்கியும் விடுகிறான் அதன் மின்னொளி பார்வைகளைப் பறிக்க நெருங்குகிறது .



மழையின் மூலமே உணவுகள்

அல்குர்ஆன் : 2:22

   இறைவனே உங்களுக்காக பூமியை விரிப்பாகவும் , வானத்தை விதானமாகவும் அமைத்து , வானத்தினின்றும் மழை பொழியச்செய்து ; அதனின்று உங்கள் உணவிற்காகக் கனி வர்க்கங்களை வெளிவரச் செய்கிறான் ; ( இந்த உண்மைகளையெல்லாம் ) நீங்கள் அறிந்து கொண்டே இருக்கும் நிலையில் அல்லாஹ்வுக்கு இணைகளை ஏற்படுத்தாதீர்கள் .


அல்லாஹ்வின் அருளை கொண்டே விளைச்சல் 

அல்குர்ஆன் : 7:58

 ( ஒரே விதமான மழையைக் கொண்டே ) வளமான பூமி தன் இறைவன் கட்டளையைக் கொண்டு 
( செழுமையாகப் ) பயிர் ( பச்சை ) களை வெளிப்படுத்துகிறது ; ஆனால் கெட்ட களர் நிலம் சொற்பமான விளைச்சலையே வெளிப்படுத்துகிறது ; நன்றி செலுத்தும் மக்களுக்கு இவ்வாறே நாம் வசனங்களை விவரிக்கின்றோம் .



மழை நீரை சேகரிப்பதில்

அல்குர்ஆன் : 15:22

இன்னும் காற்றுகளை 
சூல் கொண்ட மேகங்களாக நாமே அனுப்புகிறோம் ; பின்னர் வானத்திலிருந்து நாம் மழை பொழிவித்து , அதனை உங்களுக்கு நாம் புகட்டுகிறோம் - நீங்கள் அதனைச் சேகரித்து வைப்பவர்களும் இல்லை .




நூஹ் (நபி) காலத்தில் ஈமான் கொண்டவர்கள் கப்பலில் உயிர் பிழைத்தும்.அநியாயம் செய்தவர்கள் கன மழையால் அழிந்ததும். 


அல்குர்ஆன் : 11:44

 பூமியே !
 நீ உன் நீரை விழுங்கி விடு ! வானமே ! 
( மழையை ) நிறுத்திக்கொள் ' ' என்று சொல்லப்பட்டது ; நீரும் குறைக்கப்பட்டது ; ( இதற்குள் நிராகரித்தோர் நீரில் மூழ்கி அவர்கள் ) காரியமும் முடிந்து விட்டது ; 
( கப்பல் ) ஜூதி மலைமீது தங்கியது - அநியாயம் செய்த மக்களுக்கு
 ( இத்தகைய ) அழிவுதான் என்று கூறப்பட்டது .



மூஸா (நபி) சமூகத்தார்களுக்கு அனுப்பப்பட்ட வேதனை 

அல்குர்ஆன் : 7:133

ஆகவே அவர்கள் மீது , கனமழையையும் , வெட்டுக்கிளியையும் , பேனையும் , தவளைகளையும் , இரத்தத்தையும் தெளிவான அத்தாட்சிகளாக 
( ஒன்றன்பின் ஒன்றாக ) அனுப்பி வைத்தோம் - ஆனால் அவர்கள் பெருமையடித்து குற்றம் புரியும் சமூகத்தாராகவே ஆகியிருந்தனர் .



லூத் (நபி) சமூகத்தவர்களின் 
அழிவு 

அல்குர்ஆன் : 27:58

 இன்னும் , நாம் அவர்கள் மீது ( கல் ) மழை பொழியச் செய்தோம் ; எனவே , எச்சரிக்கப்பட்ட அவர்கள் மீது பெய்த அம்மழை மிகவும் கெட்டது .


மறுமைக்கு மழை ஓர் உவமை

அல்குர்ஆன் : 35:9

மேலும் அல்லாஹ்தான் 
காற்றுகளை அனுப்புகிறான் ; 
அவை மேகங்களைக் கிளப்பி ஓட்டுகின்றன - பின்னர் அவற்றை
 ( வறண்டு ) இறந்துகிடக்கும் நிலத்தின் மீது செலுத்துகிறோம் . ( மழை பெய்யச் செய்து ) அதைக் கொண்டு நிலத்தை அது ( வறண்டு இறந்து போனபின் உயிர்ப்பிக்கின்றோம் . 
( இறந்து போனவர் மறுமையில் ) உயிர்பெற்று எழுவதும் இவ்வாறே இருக்கிறது .





மழையின் படிப்பினைகளை புரிந்து அல்லாஹ்வை நாடுவோம்

அல்குர்ஆன் : 6:6

எத்தனையோ தலைமுறையினரை அழித்திருக்கிறோம் என்பதை அவர்கள் பார்க்கவில்லையா ? பூமியில் நாம் உங்களுக்கு செய்து தராத வசதிகளையெல்லாம் அவர்களுக்குச் செய்து கொடுத்திருந்தோம் ; அவர்கள் மீது நாம் வானம் தாரை தாரையாக மழை பெய்யுமாறு செய்து , அவர்களுக்குக் கீழே ஆறுகள் செழித்தோடும்படிச் செய்தோம் ; பிறகு அவர்களின் பாவங்களின் காரணத்தால் அவர்களை அழித்து விட்டோம் ; அவர்களுக்குப் பின் வேறு தலைமுறைகளை உண்டாக்கினோம் .


அல்குர்ஆன் : 11:52

      என்னுடைய சமூகத்தார்களே ! நீங்கள் உங்களுடைய இறைவனிடம் பிழை பொறுக்கத் தேடுங்கள் ; இன்னும் ( தவ்பா செய்து ) அவன் பக்கமே மீளுங்கள் ; அவன் உங்கள் மீது வானத்திலிருந்து தொடராக மழையை அனுப்புவான் ; மேலும் உங்களுடைய வலிமையுடன் மேலும் வலிமை பெருகச் செய்வான் இன்னும் நீங்கள்
 ( அவனைப் ) புறக்கணித்துக் குற்றவாளிகளாகி விடாதீர்கள் ”
 ( என்றும் எச்சரித்துக் கூறினார் ) 




மழை வேண்டி பிரார்த்தனை 

ஸஹீஹ் புகாரி : 1012

அப்துல்லாஹ் இப்னு ஜைத்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் திடலுக்குச் சென்று மழை வேண்டினார்கள். அப்போது கிப்லாவை நோக்கியவர்களாகத் தம் மேலாடையை மாற்றிப் போட்டு இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள்.



பெரு மழையால் பாதிக்கப்பட்டால்
பிரார்த்திப்பது 

ஸஹீஹ் புகாரி : 1017

அனஸ்(ரலி) அறிவித்தார்.
ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து 'கால்நடைகள் அழிந்துவிட்டன. பாதைகள் துண்டிக்கப்பட்டுவிட்டன. எனவே அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்' என்றார். நபி(ஸல்) அவர்கள் துஆச் செய்தனர். அந்த ஜும்ஆவிலிருந்து மறு ஜும்ஆவரை எங்களுக்கு மழை பொழிந்தது. பின்னர் ஒருவர் வந்து, 'வீடுகள் இடிந்துவிட்டன. பாதைகள் துண்டிக்கப்பட்டுவிட்டன. கால்நடைகள் அழிந்துவிட்டன' என்றார். நபி(ஸல்) அவர்கள் 'இறைவா! மணற்குன்றுகளின் மீதும் மலைகளின் மீதும் ஓடைகளிலும் விளை நிலங்களிலும் (இம்மழையைத் திருப்புவாயாக!)' என்று பிரார்த்தனை செய்தார்கள். உடைகளைக் கழுவுவது போல் அம்மழை மதீனாவைக் கழுவியது. 



ஸஹீஹ் புகாரி : 1030

அனஸ்(ரலி) அறிவித்தார். 
நபி(ஸல்) அவர்களின் அக்குள் வெண்மையை நான் பார்க்கும் அளவுக்கு (துஆச் செய்யும் போது) தம் கைகளை உயர்த்தினார்கள். 


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹூ. 




Comments