புலால் உணவு பற்றி இஸ்லாம்
புலால் உணவு பற்றி இஸ்லாம்
அளவற்ற அருளாளனும் கருணையன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் ஆரம்பம் செய்கிறேன்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹூ.
புலால் (அசைவம்) உணவு பற்றி இஸ்லாம் கூறும் இறை வசனங்கள். மற்றும் ஹதீஸ்கள்.
👇👇👇
அல்குர்ஆன் : 5:3
(தானாகச்) செத்தது, இரத்தம், பன்றியின் இறைச்சி, அல்லாஹ் அல்லாததின் பெயர் அதன் மீது கூறப்பட்ட (அறுக்கப்பட்ட)தும், கழுத்து நெறித்துச் செத்ததும், அடிபட்டுச் செத்ததும், கீழே விழுந்து செத்ததும், கொம்பால் முட்டப் பட்டுச் செத்ததும், (கரடி, புலி போன்ற) விலங்குகள் கடித்துச் செத்தவையும் உங்கள் மீது ஹராமாக்கப் பட்டிருக்கின்றன; (அனுமதிக்கப்பட்டவற்றில்) எதை நீங்கள் (உயிரோடு பார்த்து, முறைப்படி) அறுத்தீர்களோ அதைத் தவிர; (அதை உண்ணலாம். அன்றியும் பிற வணக்கம் செய்வதற்காகச்) சின்னங்கள் வைக்கப் பெற்ற இடங்களில் அறுக்கப்பட்டவையும் (உங்களுக்கு விலக்கப்பட்டுள்ளன) - இவையாவும் (பெரும்) பாவங்களாகும்; ஆனால் உங்களில் எவரேனும் பாவம் செய்யும் நாட்டமின்றி, பசிக் கொடுமையினால் நிர்ப்பந்திக்கப்பட்டு (மேலே கூறப்பட்ட விலக்கப்பட்டவற்றைப் புசித்து) விட்டால் (அது குற்றமாகாது). ஏனெனில் நிச்சயமாக அல்லாஹ் மிகவும் மன்னிப்பவனாகவும், கருணை மிக்கோனாகவும் இருக்கின்றான்.
அல்குர்ஆன் : 23:21
நிச்சயமாக உங்களுக்கு (ஆடு, மாடு, ஒட்டகம் முதலிய) பிராணிகளில் ஒரு படிப்பினை இருக்கிறது. அவற்றின் வயிறுகளிலிருந்து (சுரக்கும் பாலை) நாம் உங்களுக்கு புகட்டுகிறோம்; இன்னும் அவற்றில் உங்களுக்கு அநேக பயன்கள் இருக்கின்றன; அவற்றின் மாமிசத்திலிருந்து நீங்கள் புசிக்கின்றீர்கள்.
அல்குர்ஆன் : 5:4
(நபியே!) அவர்கள் (உண்பதற்குத் ) தங்களுக்கு ஹலாலான (அனுமதிக்கப்பட்ட)வை எவை என்று உம்மிடம் கேட்கிறார்கள்; நீர் கூறும்: உங்களுக்கு ஹலாலானவை, சுத்தமான நல்ல பொருள்களும், அல்லாஹ் உங்களுக்குக் கற்பித்திருக்கிறபடி வேட்டையாடும் பிராணி, பறவைகளுக்கு நீங்கள் பயிற்சியளித்து அவை வேட்டையாடி நீங்கள் பெற்றவையும் புசியுங்கள்; எனினும் நீங்கள் (வேட்டைக்கு விடும்போது) அதன்மீது அல்லாஹ்வின் பெயரைக் கூறி விடுங்கள்; அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் கணக்கெடுப்பதில் மிகவும் விரைவானவன்.
அல்குர்ஆன் : 6:121
எதன்மீது. (அறுக்கும்போது) அல்லாஹ்வின் பெயர் கூறப்படவில்லையோ அதைப் புசியாதீர்கள் - நிச்சயமாக அது பாவமாகும்; நிச்சயமாக ஷைத்தான்கள் தங்கள் நண்பர்களை உங்களோடு (வீண்) தர்க்கம் செய்யுமாறு தூண்டுகிறார்கள் - நீங்கள் அவர்களுக்கு வழிபட்டால், நிச்சயமாக நீங்களும் முஷ்ரிக்குகள் (இணைவைப்போர்) ஆவீர்கள்.
அல்குர்ஆன் : 16:14
நீங்கள் கடலிலிருந்து நய(மும், சுவையு)முள்ள மீன் போன்ற மாமிசத்தை புசிப்பதற்காகவும், நீங்கள் அணிந்து கொள்ளக்கூடிய ஆபரணத்தை அதிலிருந்து நீங்கள் வெளிப்படுத்தவும் அவன் தான் அதனையும் (கடலையும்) வசப்படுத்தித் தந்தான்; இன்னும் அதில் தண்ணீரைப் பிளந்து கொண்டு செல்லும் கப்பலை நீங்கள் காணுகிறீர்கள்; (பல்வேறு இடங்களுக்குச் சென்று) அவன் அருட்கொடையை நீங்கள் தேடவும், நீங்கள் நன்றி செலுத்தும் பொருட்டும் (அதை) இவ்வாறு வசப்படுத்திக் கொடுத்தான்.
ஸஹீஹ் முஸ்லிம் : 3914
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், விலங்குகளில் கோரைப்பற்கள் உள்ள ஒவ்வொன்றையும், பறவைகளில் கோரை நகங்கள் உள்ள ஒவ்வொன்றையும் (உண்ணக் கூடாதெனத்) தடை செய்தார்கள்.
ஸஹீஹ் முஸ்லிம் : 3955
ஷத்தாத் பின் அவ்ஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் இரண்டு விஷயங்களை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து மனனமிட்டுள்ளேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் எல்லாவற்றிலும் எளிய முறையை விதியாக்கியுள்ளான். எனவே,கொல்லும்போதும் எளிய முறையில் கொல்லுங்கள். அறுக்கும்போதும் எளிய முறையில் அறுங்கள். உங்களில் ஒருவர் அறுப்பதற்கு முன் கத்தியைத் தீட்டிக்கொள்ளட்டும். அறுக்கப்படும் பிராணியை ஆசுவாசப்படுத்தட்டும்.
மேலே கண்ட திருமறை வசனங்களையும், ஹதீஸ்களையும் பார்க்கும்போது , தடுக்கப்பட்ட ஒருசிலவற்றை தவிர மற்ற உணவு வகைகள் அனைத்தையும் , மாமிசம் உட்பட , இறைவன் மனிதர்களுக்கு ஆகுமானதாக ஆக்கி வைத்திருக்கிறான் என்பது தெரிகிறது .
மீன்கள்
மற்ற உயிரினங்களை அறுத்து உண்ண வேண்டும் . ஆனால் மீன்களை அறுக்கத் தேவையில்லை : தானாகச் செத்த மீன்களையும் உண்ணலாம் என்று நபிகள் நாயகம் ( ஸல் ) அவர்கள் விளக்கியுள்ளனர் . நீர் வாழ் உயிரினங்களுக்கும் , மற்ற உயிரினங்களுக்கும் வித்தியாசம் இருக்கிறது . நீர்வாழ் உயிரினங்களுக்கு ஓடுகின்ற இரத்தம் கிடையாது . அதை உயிருடன் பிடித்து அறுத்தாலும் அதில் இரத்தம் சிறிதளவு கசியுமே தவிர இரத்தம் ஓடாது . வடிவது கூட இல்லை . இஸ்லாமிய நம்பிக்கையின்படி ஓட்டப்படும் இரத்தம் தடை செய்யப்பட்டுள்ளது . எனவே தான் ஆடு , மாடு போன்ற உயிரினங்களை அறுக்கும்போது வெளியாகும் இரத்தத்தை உண்ணக் கூடாது . ஆடு , மாடு போன்றவை உயிருடன் இருக்கும்போது அறுத்தால் மட்டுமே அதிலிருந்து இரத்தம் வெளிப்படும் . செத்த பிறகு அறுத்தால் இரத்தம் வெளிப்படாது . எனவே அந்த இறைச்சியைச் சாப்பிடும்போது இரத்தத்தையும் சேர்த்து சாப்பிடும் நிலை ஏற்படுகிறது. இரத்தத்தில் மனிதன் உட்கொள்ளக் கூடாத அணுக்களோ , கிருமிகளோ இருக்கலாம் . பிராணிகள் செத்தவுடன் இரத்தம் உறைய ஆரம்பித்து விடுகிறது . இரத்தத்தில் வாழ முடியாத கிருமிகள் மற்ற பகுதிகளுக்கும் பரவி விடுகிறது . இரத்தத்தைச் சாப்பிடுவதால் ஏற்படும் விளைவுகள் அனைத்தும் அந்த இறைச்சியைச் சாப்பிடும்போதும் ஏற்படும் என்பதை யாரும் மறுக்க முடியாது . மீன்களுக்கு ஓடக் கூடிய இரத்தம் இல்லாததால் அறுத்தாலும் அதிலிருந்து இரத்தம் பீரிட்டு ஓடாது . தானாகச் செத்தாலும் சதை வரை ஊடுறுவும் இரத்தம் மீன்களில் இல்லை . எனவே தான் மீனை அறுக்குமாறு இஸ்லாம் கூறவில்லை .
பிராணிகளை அறுக்கும் முறை
பிராணிகளின் குரல்வளையில் கூர்மையான கத்தி மூலம் அறுத்துத்தான் பிராணிகளைக் கொல்ல வேண்டும் என்று இஸ்லாம் கூறுகிறது. இஸ்லாம் கூறுகின்ற முறையில் உயிரினங்களை அறுக்கும்போது அவற்றுக்கு எந்த வேதனையும் தெரியாது என்று
ஜெர்மனி நாட்டில் உள்ள ஹனோவர் பல்கலைக் கழகத்தில் ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது . அந்த ஆய்வை நடத்தியவர்கள் பேராசிரியர் சூல்ட்ஜ் மற்றும் அவரது துணை ஆய்வாளர் டாக்டர் ஹாஸிம் ஆவார்கள் .
👇👇👇
மேலும்
குறிஞ்சி , முல்லை , மருதம் , நெய்தல் , பாலை என ஐவகை நிலங்களிலும் வாழ்ந்த பழந்தமிழ் மக்கள் புலால் அதாவது ஊன் உணவைப் பழக்கமாகக் கொண்டிருந்தனர் என்பது சங்கப் பாடல்களிலும் , கல்வெட்டுகளிலும் வரலாற்று ஆதாரங்களாக இருக்கின்றன .
தமிழர் உணவு
நூலாசிரியர் : சே. நமசிவாயம்
வெளியீடு : உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை.
👇👇👇
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹூ.
Comments
Post a Comment