கொலை இஸ்லாமிய தீர்வு


கொலை இஸ்லாமிய தீர்வு 
 




அளவற்ற அருளாளனும் கருணையன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் ஆரம்பம் செய்கிறேன்.



அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹூ. 



"கொலை" மிகக் கொடிய குற்றமாகும். கொலைக்கு இஸ்லாம் மரண தண்டனையை விதித்துள்ளது. இருப்பினும் கொலை செய்தவனுக்கு
 பாதிக்கப்பட்ட குடும்பத்தினர்கள் அவரை மன்னிக்கலாம் அல்லது நஷ்ட ஈடு கேட்கலாம். அல்லது பழிக்குப் பழி வாங்கலாம். நஷ்ட ஈட்டைக் கொலை செய்தவன் பெருந்தன்மையுடனும் , நன்றியறிதலுடனும் செலுத்திவிடல் வேண்டும். இதில் வரம்பு மீறினால் அவருக்கு அல்லாஹ்விடத்தில் கடுமையான வேதனை உண்டு. 



ஸஹீஹ் புகாரி : 6013

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
(படைப்பினங்களின் மீது) கருணை காட்டாதவர் (படைத்தவனால்) கருணை காட்டப்படமாட்டார்.
என ஜரீர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.




அல்குர்ஆன் : 17:33

( கொலையை ) அல்லாஹ் விலக்கியிருக்க நீங்கள் எந்த மனிதனையும் நியாயமான காரணமின்றிக் கொலை செய்து விடாதீர்கள் ; எவரேனும் அநியாயமாகக் கொலை செய்யப்பட்டு விட்டால் , அவருடைய வாரிசுக்கு ( பதிலுக்கு பதில் செய்யவோ அல்லது மன்னிக்கவோ ) நாம் அதிகாரம் கொடுத்திருக்கிறோம் ; ஆனால் கொலையின் மூலம் பதில் செய்வதில் வரம்பு கடந்து விடக் கூடாது ; நிச்சயமாக கொலையுண்டவரின் வாரிசு
 ( நீதியைக் கொண்டு ) உதவி செய்யப் பட்டவராவார். 



கொலை செய்பவருக்கு பயம் உண்டாகும் 

அல்குர்ஆன் : 2:179

அறிவாளிகளே! (கொலைக்குப்) பழிவாங்குவதில் உங்களுக்கு வாழ்க்கை உண்டு. (ஏனென்றால், பழிவாங்கி விடுவார்கள் என்ற பயத்தால் கொலை செய்யக் கருதுபவனும், அவனால் கொலை செய்யக் கருதப்பட்டவனும் தப்பித்துக் கொள்ளலாம்.) நீங்கள் (அல்லாஹ் தடுத்தவற்றிலிருந்து விலகி அவனை) அஞ்சிக் கொள்ளுங்கள்.



மன்னிப்பு 

அல்குர்ஆன் : 2:178

    ஈமான் கொண்டோரே ! கொலைக்காகப் பழி தீர்ப்பது உங்கள் மீது விதிக்கப்பட்டுள்ளது சுதந்திரமுடையவனுக்குச் சுதந்திரமுடையவன் ; அடிமைக்கு அடிமை ; பெண்ணுக்குப் பெண் இருப்பினும் ( கொலை செய்த ) அவனுக்கு அவனது ( முஸ்லிம் ) சகோதரனாகிய கொலையுண்டவனின் வாரிசுகளால் ஏதும் மன்னிக்கப்படுமானால் , வழக்கமான முறையைப் பின்பற்றி ( இதற்காக நிர்ணயிக்கப் பெறும் ) நஷ்ட ஈட்டைக் கொலை செய்தவன் பெருந்தன்மையுடனும் , நன்றியறிதலுடனும் செலுத்திவிடல் வேண்டும் இது உங்கள் இறைவனிடமிருந்து கிடைத்த சலுகையும் , கிருபையுமாகும் ; ஆகவே , இதன் பிறகு ( உங்களில் ) யார் வரம்பு மீறுகிறாரோ , அவருக்குக் கடுமையான வேதனையுண்டு .



தவறுதலாக நிகழ்ந்துவிட்ட கொலைக்குப் பின்
 ( கொல்லப்பட்டவரின் உறவினர்கள் கொலையாளியை ) மன்னித்துவிடுவது .

ஸஹீஹ் புகாரி : 6883

     ஆயிஷா ( ரலி ) அறிவித்தார் . உஹுதுப் போரின் ( தொடக்கத்தின் போது இணைவைப்பாளர்கள் தோற்கடிக்கப்பட்டார்கள் . பின்னர் மக்களிடையே இப்லீஸ் புகுந்து ) அல்லாஹ்வின் அடியார்களே ! உங்களுக்குப் பின்னால் இருப்பவர்களைக் கவனியுங்கள் ' என்று கூவினான் . எனவே , முஸ்லிம்களில் முன் அணியினர் பின் அணியினரை நோக்கித் திரும்பி ( அவர்களைத் தாக்கத் தொடங்கினர் . அப்போது முஸ்லிம்கள் அல்யமான் ( ரலி ) அவர்களைக் கொன்றுவிட்டனர் . ( அவரின் புதல்வர் ) ஹுதைஃபா ( ரலி ) அவர்கள் ' என் தந்தை என் தந்தை ' என்று கூறினார் . 
( ஆயினும் எதிரி என்று நினைத்து ) அவரின் தந்தையை மக்கள் கொன்றுவிட்டனர் . அப்போது ஹுதைஃபா ( ரலி ) அவர்கள் , ' அல்லாஹ் உங்களை மன்னிப்பானாக ! ' என்று ( கொலை செய்தவர்களை நோக்கிக் கூறினார்கள். 



கல்லால் அடித்துக் கொலை செய்தவனுக்குக் கல்லால் அடித்து மரண தண்டனை நிறைவேற்றுவது. 


ஸஹீஹ் புகாரி : 6879

அனஸ் இப்னு மாலிக் ( ரலி ) அறிவித்தார் . ஒரு யூதன் ஒரு சிறுமியின் வெள்ளி நகைக்காக அந்தச் சிறுமியைக் கல்லால் ( நசுக்கிக் ) தாக்கினான் . அவளுடைய உயிர் ஊசலாடிக் கொண்டிருந்த நிலையில் நபி ( ஸல் ) அவர்களிடம் அச்சிறுமி கொண்டு வரப்பட்டாள் . அப்போது ( அவளிடம் ) நபி ( ஸல் ) அவர்கள் , ' இன்னாரா உன்னைத் தாக்கினார் ? ' என்று கேட்டார்கள் . அவள் ' இல்லை ' என்று தலையால் சைகை செய்தாள் . பிறகு இரண்டாவது முறை ( வேறொரு நபர் குறித்து ) நபி ( ஸல் ) அவர்கள் கேட்டபோது அப்போதும் ' இல்லை ' என்று தலையால் சைகை செய்தாள் . மூன்றாம் முறை நபி ( ஸல் ) அவர்கள் 
( கொலையாளியின் பெயர் கூறி ) அவளிடம் கேட்டபோது அவள் ' ஆம் ' என்று தலையால் சைகை செய்தாள் . எனவே , இரண்டு கற்களுக்கிடையில் 
( அவன் தலையை வைத்து நசுக்கி ) அவனைக் கொல்லுமாறு நபி ( ஸல் ) அவர்கள் உத்தரவிட்டார்கள். 




கொலை செய்யாதீர்கள் 
வாழ வையுங்கள் 


அல்குர்ஆன் : 5:32

நிச்சயமாக எவன் ஒருவன் கொலைக்குப் பதிலாகவோ அல்லது பூமியில் ஏற்படும் குழப்பத்தைத் தடுப்பதற்காகவோ ) அன்றி , மற்றொருவரைக் கொலை செய்கிறானோ அவன் மனிதர்கள் யாவரையுமே கொலை செய்தவன் போலாவான் ; மேலும் , எவரொருவர் ஓராத்மாவை வாழ வைக்கிறாரோ அவர் மக்கள் யாவரையும் வாழ வைப்பவரைப் போலாவார் ' ' என்று இஸ்ராயீலின் சந்ததியினருக்கு விதித்தோம் . மேலும் , நிச்சயமாக நம் தூதர்கள் அவர்களிடம் தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டு வந்தார்கள் ; இதன் பின்னரும் அவர்களில் பெரும்பாலோர் பூமியில் வரம்பு கடந்தவர்களாகவே இருக்கின்றனர் .





இஸ்லாம் தீவிரவாதத்தை ஒரு போதும் ஆதரிப்பதில்லை . ஊக்குவிப்பதுமில்லை . மாறாக கடுமையாக கண்டிக்கிறது . கொலை செய்தவனுக்கு மிகக் கடுமையான தண்டனையையே அளிக்க சொல்கிறது .

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹூ. 





Comments