நிற வெறியை ஒழிக்க இஸ்லாம்
நிற வெறியை ஒழிக்க இஸ்லாம்
அளவற்ற அருளாளனும் கருணையன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் ஆரம்பம் செய்கிறேன்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹூ.
ஜார்ஜ் பெர்ரி ஃபிலாய்ட் ஜூனியர்
(மே 25, 2020) ஒரு ஆப்பிரிக்க அமெரிக்க கருப்பு இன மனிதர் மினியாப்போலீசாரால் கைது செய்து நடு ரோட்டில் போலீசாரின் காலால் கழுத்தை நெரித்து கொல்லப்பட்ட சம்பவம். அமெரிக்காவில் மோசமான நிற வெறியை காட்டுகிறது.
BLACK LIVES MATTER
அமெரிக்கா முழுவதும் மற்றும் சர்வதேச அளவில் போராட்டங்கள் நடந்து வருகிறது. நிற வெறியை இன வெறியை ஒழிக்க இஸ்லாம் ஒன்றே தீர்வு.
நாம் அனைவரும் இறைவனின் படைப்புகள் . நம்மில் எந்தப் பேதமும் ஏற்றத் தாழ்வும் இருக்கக்கூடாது . அதையும் மீறி நிகழும் அநீதிகளுக்குத் திருக்குர்ஆனும் , நபி மொழியும் தான் தீர்வே தவிர வேறில்லை .
நாம் அனைவரும் ஒரு தாய் மக்கள்
அல்குர்ஆன் : 4:1
மனிதர்களே! உங்கள் இறைவனுக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள், அவன் உங்கள் யாவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான், அவரிலிருந்தே அவர் மனைவியையும் படைத்தான்; பின்னர் இவ்விருவரிலிருந்து, அநேக ஆண்களையும் பெண்களையும் (வெளிப்படுத்தி உலகில்) பரவச் செய்தான்; ஆகவே, அல்லாஹ்வுக்கே பயந்து கொள்ளுங்கள்; அவனைக்கொண்டே நீங்கள் ஒருவருக்கொருவர் (தமக்குரிய உரிமைகளைக்) கேட்டுக் கொள்கிறீர்கள்; மேலும் (உங்கள்) இரத்தக் கலப்புடைய உறவினர்களையும் (ஆதரியுங்கள்) - நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது கண்காணிப்பவனாகவே இருக்கின்றான்.
அல்குர்ஆன் : 49:13
மனிதர்களே ! நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண் , ஒரு பெண்ணிலிருந்தே படைத்தோம் ; நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளும் பொருட்டு . பின்னர் , உங்களைக் கிளைகளாகவும் , கோத்திரங்களாகவும் ஆக்கினோம் ;
( ஆகவே ) உங்களில் எவர் மிகவும் பயபக்தியுடையவராக இருக்கின்றாரோ , அவர்தாம் அல்லாஹ்விடத்தில் , நிச்சயமாக மிக்க கண்ணியமானவர் . நிச்சயமாக அல்லாஹ் நன்கறிபவன் ,
( யாவற்றையும் சூழந்து ) தெரிந்தவன் .
மனிதன் களி மண்ணால் படைக்கப் பட்டான்
அல்குர்ஆன் : 15:26
ஓசை தரக்கூடிய கருப்பான களி மண்ணால் மனிதனை நிச்சயமாக நாமே படைத்தோம்.
மனிதனின் நிறம்
அல்லாஹ் ஆதமை பூமி முழுவதும் திரட்டப்பட்ட மண்ணின் ஒரு கை அளவிலிருந்து படைத்தான் . எனவே ஆதமின் மக்கள் பூமியின் நிறம் மற்றும் தன்மைக்கு ஏற்றவாறு அமைகின்றனர் . அவர்களில் சிலர் வெள்ளையாகவும் , சிலர் சிவப்பாகவும் , சிலர் கறுப்பாகவும் , சிலர் இரண்டும் கலந்துமுள்ளனர் . அவர்களில் சிலர் கெட்ட குணமுடையோராகவும் , சிலர் மென்மையான குணமுடையோராகவும் , சிலர் கடின சித்தமுடையோராகவும் , சிலர் நடுநிலையிலும் உள்ளனர் .
( நூல் : அஹ்மத் - அறிவிப்பாளர் : ஆபூமூஸா
( ரலியல்லாஹு அன்ஹு )
அல்குர்ஆன் : 30:22
மேலும் வானங்களையும், பூமியையும் படைத்திருப்பதும்; உங்களுடைய மொழிகளும் உங்களுடைய நிறங்களும் வேறுபட்டிருப்பதும், அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளவையாகும். நிச்சயமாக இதில் கற்றரிந்தோருக்கு அத்தாட்சிகள் இருக்கின்றன.
அல்குர்ஆன் : 35:28
இவ்வாறே , மனிதர்கள் , விலங்குகள் , கால் நடைகள் ஆகியவற்றின் நிறங்களும் பலவிதமாய் உள்ளன . உண்மையில் அல்லாஹ்வின் அடிமைகளில் ஞானமுடையோர் மட்டுமே அவனுக்கு அஞ்சுகிறார்கள்.
ஸஹீஹ் புகாரி : 5305
அபூ ஹுரைரா ( ரலி ) அறிவித்தார்
( கிராமவாசியான ) ஒருவர் நபி ( ஸல் ) அவர்களிடம் வந்து , இறைத்தூதர் அவர்களே ! ( வெள்ளை நிறமுடைய ) எனக்குக் கறுப்பு நிறத்தில் ஒரு மகன் பிறந்துள்ளான் ' ( அவன் எப்படி எனக்குப் பிறந்தவனாக இருக்க முடியும் ? ) ' என்று ( சாடையாகக் கேட்டதற்கு நபி ( ஸல் ) அவர்கள் , உன்னிடம் ஒட்டகம் ஏதேனும் உள்ளதா ? என்று கேட்டார்கள் . அதற்கவர் , ஆம் என்றார் . நபி ( ஸல் ) அவர்கள் , அதன் நிறம் என்ன ? என்ற கேட்டார்கள் . அவர் , சிவப்பு என்று பதிலளித்தார் . நபி ( ஸல் ) அவர்கள் , உன் ஒட்டகங்களுக்கிடையே சாம்பல் நிற ஒட்டகம் உள்ளதா ? என்று கேட்டார்கள் . அவர் , ஆம் என்றார் . நபி
( ஸல் ) அவர்கள் , தன்னுடைய தாயிடம் இல்லாத ) அந்த நிறம் அதற்கு மட்டும் எவ்வாறு வந்தது ? என்று கேட்டார்கள் . அவர் , அதன் ( தந்தையான ) ஆண் ஒட்டகத்தின் பரம்பரையிலிருந்து வந்திருக்கலாம் ' என்று கூறினார் . நபி
( ஸல் ) அவர்கள் , உன்னுடைய இந்த மகனும் உன் பரம்பரையிலுள்ள
( முதாதையரின் ) நிறத்தினைக் கொண்டிருக்கக் கூடும் ' என்று கூறினார்கள் .
வேண்டாம் இன வெறி
! ஓர் மக்களே ! உங்கள் இறைவன் ஒரே ஒருவன் தான் . உங்களுடைய தந்தை ஒருவர் தான் . அரபியருக்கு அரபியல்லாதவரை விடவும் , ஓர் அரபியல்லாதவருக்கு அரபியரை விடவும் , ஒரு கருப்பருக்கு சிவப்பரை விடவும் , ஒரு சிவப்பருக்கு ஒரு கருப்பரை விடவும் எந்தச் சிறப்பும் இல்லை , இறையச்சத்தைத் தவிர !
நூல் : அஹ்மத் 22391
ஒரு முறை புசைலா என்ற பெண்மணி நபி அவர்களிடம் வந்து “ இறைத்தூதரே நான் என் சமூகத்தை நேசிப்பது இன வெறியா " என்று கேட்டார்கள் . அதற்கு நபி அவர்கள் " தன் சமூகத்தை ஒருவன் நேசிப்பது இனவெறி அல்ல . மாறாக தன் சமூகத்தைச் சார்ந்தவன் வரம்பு மீறி அநீதியை செய்யும்போது அவன் செய்வது தவறு என்று தெரிந்தும் அவன் தன் சமூகத்தைச் சார்ந்தவன் என்பதற்காக அவனுக்கு உதவினால் அதுவே இனவெறி " என்றார்கள் .
நூல் : அஹ்மத்
மனிதர்களிடையே சமத்துவம்
ஸஹீஹ் புகாரி : 7142
இறைத்தூதர் ( ஸல் ) அவர்கள் கூறினார்கள் உலர்ந்த திராட்சை போன்ற ( சுருங்கிய தலையுடைய அபிசீனிய ( கறுப்பு நிற ) அடிமையொருவர் உங்களுக்குத் தலைவராக ஆக்கப்பட்டாலும் ( அவரின் சொல்லைக் ) கேளுங்கள் ( அவருக்குக் ) கீழ்ப்படியுங்கள் . என அனஸ் ( ரலி ) அறிவித்தார் .
கருப்பின இனத்தைச் சேர்ந்த , அபீசீனிய மொழி பேசக்கூடிய , அபீசீனிய நாட்டைச் சேர்ந்த பிலால்
( ரலி ) அவர்களை தலைமை பொறுப்பேற்க நியமித்ததன் மூலம் வெள்ளையர் - கருப்பர் என்ற நிற வெறி ஒழிக்கப்பட்டது.
கருப்பின பிலாலை கஃபாவின் மேலறவைத்த தலைவர் முஹம்மத் நபி (ஸல்) அவர்கள், அவரையே தொழுகைக்கான பாங்கு எனும் உயரியப் பணியைச் செய்ய ஆரம்பக் கட்டதிலேயே பணித்தார்கள்..
தம் நெஞ்சோடு பிலாலை நேசத்தலைவர் முஹம்மது நபி கட்டியணைப்பார்கள்..
மதீனா வந்த போதும் மஸ்ஜிதுந் நபவியின் முகட்டில் ஏறி நின்று பாங்கு எனும் தொழுகைக்கான முதல் அழைப்பை கொடுக்கவும் இதே கருப்பினத்தைச் சார்ந்த பிலாலைத் தான் நபி அழைத்தார்கள்.
நிறவெறியை ஒழித்து , அவ்வெண்ணத்தை அடியோடு இல்லாமல் ஆக்கிக் காட்டிய மார்க்கம் இஸ்லாம்..(ஹஜ் யாத்திரை)
ஒரே சீருடை : அதிலும் வெள்ளை சீருடை : அணிந்து மன்னனிலிருந்து பாமரன் வரை தோளோடு தோள் சேர்த்து ' லப்பைக்க அல்லாஹும்ம லப்பைக் : லப்பைக்க லாஷரீக லக்க லப்பைக் ' இன்னல் ஹம்த வ நிஃமத்த லக வல் முல்க் லா ஷரீக லக்
வந்து விட்டேன் ! இறைவா ! உன்னிடமே வந்து விட்டேன் ! உனக்கு யாதொரு இணையுமில்லை . உன்னிடமே வந்து விட்டேன் . நிச்சயமாக புகழும் அருட்பாக்கியங்களும் ஆட்சியும் உனக்கே உரியன . உனக்கு யாதொரு இணையுமில்லை ' என்ற விண் முட்டும் கோஷத்தோடு மினா பள்ளியில் ஹாஜிகள் அமர்ந்திருக்கும் காட்சியே நாம் பார்ப்பது .
மனித குலத்திற்கு விடுதலை இஸ்லாம் மட்டுமே
ஸஹீஹ் முஸ்லிம் : 5012.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ், உங்கள் தோற்றங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை. மாறாக, உங்களுடைய உள்ளங்களையும் செயல்களையுமே அவன் பார்க்கிறான்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹூ.
Comments
Post a Comment