குத்பா என்றால் என்ன ?
குத்பா என்றால் என்ன?
அளவற்ற அருளாளனும் கருணையன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் ஆரம்பம் செய்கிறேன் .
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹூ.
குத்பா என்பது அரபிச்சொல்.குத்பா என்றால் தமிழில் பிரசங்கம், சொற்பொழிவு, உரையை நிகழ்த்துதல் என்று பொருள். சொற்பொழிவு நிகழ்த்தும் ஒருவரின் செயலுக்கு வழங்கப்படும் பெயராகும்.
அல்குர்ஆன் : 14:4
ஒவ்வொரு தூதரையும் அவருடைய சமூகத்தாருக்கு அவர் விளக்கிக் கூறுவதற்காக அவர்களுடைய மொழியிலேயே
( போதிக்கும் படி ) நாம் அனுப்பிவைத்தோம் ; அல்லாஹ் தான் நாடியோரை வழிதவறச் செய்கின்றான் , தான் நாடியோருக்கு நேர்வழியையும் காண்பிக்கின்றான் ; அவன் மிகைத்தவனாகவும் ஞானமுடையவனாகவும் இருக்கின்றான் .
சொற்பொழிவு நிகழ்த்துபவருக்கு அரபு மொழியில் " கதீப் " என்று அழைக்கப்படுவர்.
உண்மையில் வரவேற்கத்தக்க ஓர் நல்ல
சொற்பொழிவானது சுருக்கமான வசனங்களையும் , மனதைக் கவரும் சொற்களையும் , கேட்போருக்கு இலகுவாகப் புரிந்து கொள்ளக்கூடிய விளக்கத்தையும் கொண்டிருக்கும் . மேலும் , மார்க்க ரீதியில் இச் சொற்பொழிவானது இம்மை , மறுமை இரண்டினதும் நலனைக் கருத்திற்கொண்டு மார்க்க சட்டதிட்டங்கள் , மற்றும் அதன் நோக்கங்கள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு மக்களுக்குச் செய்யப்படும், அறிவுரை, எத்திவைத்தல் ஆகிய செயற்பாடுகளைக் குறிக்கும்.
ஜும்ஆத் தொழுகைக்கு இரண்டு குத்பா உரைகளும். பெருநாள் தொழுகைக்கு ஒரு உரை மட்டும் நிகழ்த்த வேண்டும். ஜும்ஆ தொழுகைக்கு முன்னும் பெருநாள் தொழுகைக்கு பின்னும் குத்பா நிகழ்த்த வேண்டும். இரண்டு தொழுகைகளும் நிறைவு பெற குத்பா என்பது ஷர்த்தாகும்.(கட்டாயமாகும்).
அல்குர்ஆன் : 62:9
நம்பிக்கை கொண்டோரே ! வெள்ளிக்கிழமை தினத்தில் தொழுகைக்காக அழைப்பு விடுக்கப்பட்டால் , அல்லாஹ்வை நினைவு கூர்வதன்பால் நீங்கள் விரைந்து செல்லுங்கள் . இன்னும் , வியாபாரத்தையும் விட்டு விடுங்கள் . நீங்கள் அறிந்து கொள்பவர்களாக இருந்தால் இதுவே உங்களுக்குச் சிறந்ததாகும்.
குத்பா நின்ற நிலையில் நிகழ்த்துதல்
அபூதாவூத் : 1093
அல்லாஹ்வின் திருத்தூதர் ( ஸல் ) அவர்கள் நின்றவாறு சொற்பொழிவு நிகழ்த்துவார்கள் . பிறகு உட்கார்வார்கள் . பிறகு எழுந்து சொற்பொழிவு நிகழ்த்துவார்கள் . அவர்கள் உட்கார்ந்தவாறு பிரசங்கம் செய்தார்கள் என்று யாராவது உனக்கு அறிவித்தால் நிச்சயமாக அவர் பொய் சொல்லியவராவார் . மேலும் தான் அவர்களுடன் இரண்டாயிரம் தொழுகைகளுக்கு அதிகமாக அல்லாஹ்வின் மீது சத்தியமாக தொழுதுள்ளேன் . அறிவிப்பவர் : ஜாபிர் பின் ஸமுரா ( ரலி ) குறிப்பு : இந்த ஹதீஸ் முஸ்லிம் , நஸயீ ஆகியவற்றிலும் இடம் பெற்றுள்ளது.
அல்லாஹ்வைப் புகழ்ந்து நபி மீது ஸலவாத்துக் கூறி குத்பாவை ஆரம்பித்தல் :
ஸஹீஹ் முஸ்லிம் : 1574
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் வெள்ளிக்கிழமை உரையில் அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்வார்கள்.
குத்பதுல் ஹாஜா மூலம் துவங்குதல்
குத்பாவை ஆரம்பிக்கும் போது அல்லாஹ்வைப் புகழ்ந்து நபியவர்கள் மீது ஸலவாத்துக் கூறி ஷஹாதா கூற வேண்டும் .
إن الحمد لله نحمده ونستعينه ونستغفره، ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له، ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمداً عبده ورسوله.
*இன்னல்ஹம்(d)தலில்லாஹி நஹ்ம(d)துஹு வநஸ்தஈநுஹு வநஸ்(th)தஃபிருஹ், வநவூ(d)து பில்லாஹி மின் ஷுரூரி அன்ஃபுஸினா வ மின் ஸய்யிஆத்தி அஃமாலினா, மய்யஹ்(d)திஹில்லாஹு ஃபலா மு(dh)ழிள்ளலாஹ், வமய் யு(dh)ழ்லில் ஃபலா ஹாதியலாஹ், வ அஷ்ஹ(d)து அல்லா இலாஹா இல்லல்லாஹு வஹ்(d)தஹு லா ஷரீ(k)கலஹு வ அஷ்ஹ(d)து அன்ன முஹம்ம(d)தன் அ(b)ப்(d)துஹு வரசூலுஹ்.*
நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! அவனையே நாம் புகழ்கிறோம்; அவனிடமே நாம் உதவி தேடுகிறோம். நம்முடைய மன இச்சைகளின் கெடுதிகளை விட்டும், நம்முடைய செயல்களின் தீமைகளை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடுகிறோம். யாருக்கு அல்லாஹ் நேர்வழி காட்டுவானோ, அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. யாரை அல்லாஹ் வழிகேட்டில் விட்டுவிடுவானோ, அவரை நேர்வழியில் செலுத்துபவர் யாரும் இல்லை. இன்னும், நான் சாட்சி சொல்கிறேன்: "அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாரும் இல்லை. அவன் தனித்தவன்; அவனுக்குக் கூட்டாளி யாரும் இல்லை.' மேலும், நான் சாட்சி சொல்கிறேன்: "நிச்சயமாக முஹம்மது, அவனுடைய அடியாரும் அவனுடைய தூதரும் ஆவார்.
அறிவிப்பவர்: *இப்னு அப்பாஸ்* (ரலி)
நூல்கள்: *முஸ்னத் அஹ்மத் 3275, ஸஹீஹ் முஸ்லிம் 1576, சுனன் இப்னுமாஜா 1892*
இவ்வாறு ஹம்து ஸலவாத்து ஓதியதன் பின்னர் பின்வரும் மூன்று வசனங்களையும் ஓத வேண்டும் . '
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ
*யா அய்யுஹல்ல(d)தீன ஆமனூ இத்த(q)குல்லாஹ ஹ(q)க்க(th)து(q)காத்திஹி வலா (th)தமூ(th)துன்ன இல்லா வஅன்(th)தும் முஸ்லிமூன்.*
நம்பிக்கை கொண்டோரே ! நீங்கள் அல்லாஹ்வை அஞ்ச வேண்டிய முறையில் அஞ்சிக் கொள்ளுங்கள் . நிச்சயமாக நீங்கள் முஸ்லிம்களாகவே அன்றி மரணித்து விடவேண்டாம் . '
அல்குர்ஆன் :( 3 : 102 )
يَا أَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللَّهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللَّهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا
யா அய்யுஹன்னாஸ், இத்த(q)கூ ர(b)ப்ப(k)குமுல்ல(d)தீ(kh)ஹல(q)க(k)கும் மின் நஃப்ஸிவ் வாஹி(d)தா, வ(kh)ஹல(q)க மின்ஹா ச(z)வ்ஜஹா,
வ பஸ்ஸ மின்ஹுமா ரிஜாலன் கசீரவ் வ நிஸாஅ, வத்த(q)குல்லா ஹல்ல(d)தீ(th)
தஸாஅலூன (b)பிஹி வல்அர்ஹாம், இன்னல்லாஹ கான அலைக்கும் ர(q)கீ(b)பா.*
' மனிதர்களே ! உங்களை ஒரே ஆத்மாவி லிருந்து படைத்த உங்கள் இரட்சகனை அஞ்சிக் கொள்ளுங்கள் . அவன் அதிலிருந்து அதன் துணைவியைப் படைத்து , அவையிரண்டிலிருந்தும் அதிகமான ஆண்களையும் பெண்களையும் பரவச் செய்தான் . எவனைக் கொண்டு நீங்கள் ஒருவர் மற்றவரிடம் ( உரிமைகளைக் ) கேட்டுக் கொள்வீர்களோ அந்த அல்லாஹ்வையும் மேலும் , இரத்த உறவுகளைத் துண்டித்து நடப்பதையும் அஞ்சிக் கொள்ளுங்கள் . நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கண்காணிப்பவனாக இருக்கின்றான் . ' அல்குர்ஆன் :( 4 : 1 ) '
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا شیدا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا
*யா அய்யுஹல்ல(d)தீன ஆமனூ, இத்த(q)குல்லாஹ், வ(q)கூலூ (q)கவ்லன் ஸ(d)தீ(d)தா, யுஸ்லிஹ்ல(k)கும் அஃமால(k)கும் வ யஃக்ஃபிர்ல(k)கும்(d)துநூப(k)கும், வமை யு(th)த்இல்லாஹ வரசூலஹு, ஃப(q)கத் ஃபா(z)ஸ ஃபவ்(z)சன் அழீமா.*
நம்பிக்கை கொண்டோரே ! அல்லாஹ்வை அஞ்சுங்கள் ! இன்னும் நேர்மையான வார்த்தையையே கூறுங்கள். ( அவ்வாறு செய்தால் ) உங்கள் செயல்களை உங்களுக்கு அவன் சீராக்குவான் . மேலும் , உங்கள் பாவங்களை உங்களுக்கு மன்னிப்பான் . யார் அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் கட்டுப் படுகின்றாரோ நிச்சயமாக அவர் மகத்தான வெற்றியை ஈட்டிக் கொண்டார் . '
அல்குர்ஆன் :( 33 : 70-71 )
நபி ( ச ) அவர்கள் ஹம்து ஸலவாத்தின் பின்னர் பின்வருமாறும் தமது குத்பா உரைகளில் கூறுவதுண்டு . '
إِنَّ أَصْدَقَ الْحَدِيثِ كِتَابُ اللَّهِ، وَأَحْسَنَ الْهَدْيِ هَدْيُ مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ مُحْدَثَةٍ بِدْعَةٌ وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ، وَكُلُّ ضَلَالَةٍ فِي النَّارِ
*ஃபஇன்ன அஸ்(d)த(q)கல் ஹ(d)தீஸி கி(th)தா(b)புல்லாஹ், வ அஹ்ஸனல் ஹ(d)த்யி ஹ(d)த்யு முஹம்ம(d)தின்)ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம்(, வஷர்ருல் உமூரி முஹ்(d)தசாத்துஹா, வ குல்லு முஹ்(d)தச(th)திம் பி(d)த்ஆ, வ குல்லு பி(d)த்அத்தின் ழளாலா, வ குல்லு ழளாலத்தின் ஃபின் நார்.*
காரியங்களில் சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும் . வழிமுறையில் சிறந்தது முஹம்மத்
நபி ( ச ) அவர்களின் நேர் வழியாகும் . காரியங்களில் கெட்டது நூதனங்களாகும் . அனைத்து பித்அத்துக்களும் வழிகேடுகளாகும் என்றும் கூறுவார்கள் . ஒவ்வொரு வழிகேடும் நரகத்தில் கொண்டு சேர்க்கும். அறிவிப்பவர் : ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் ( வ ) நூல் : முஸ்லிம் 867-43 , இப்னு மாஜா- : 45 , அஹ்மத் : 14984
👆👆👆
இவற்றை குத்பாவின் ஆரம்பமாக அமைத்துக் கொள்ள வேண்டும் .
குத்பா சுருக்கமாக அமைத்தல்
ஸஹீஹ் முஸ்லிம் : 1577
அபூவாயில் ஷகீக் பின் சலமா ( ரஹ் ) அவர்கள் கூறியதாவது : எங்களுக்கு அம்மார் பின் யாசிர் ( ரலி ) அவர்கள்
( ஒரு வெள்ளிக்கிழமை ) சுருக்கமாகவும் செறிவுடனும் உரை நிகழ்த்தினார்கள் . அவர்கள் ( மேடையிலிருந்து ) இறங்கியபோது , " அபுல் யக்ளானே ! செறிவுடன் சுருக்கமாகப் பேசினீர்கள் . இன்னும் சிறிது நேரம் பேசியிருந்தால் நன்றாயிருந்திருக்குமே ? " என்று நாங்கள் கூறினோம் . அதற்கு அவர்கள் " அல்லாஹ்வின் தூதர் ( ஸல் ) அவர்கள் " தொழுகையை நீட்டி உரையைச் சுருக்குவது ஒருவரது மார்க்க அறிவிற்கு அடையாளம் ஆகும் . ஆகவே , தொழுகையை நீட்டி உரையைச் சுருக்குங்கள் . சில சொற்பொழிவுகளில் கவர்ச்சி உள்ளது " என்று கூறியதை நான் கேட்டுள்ளேன் " என்றார்கள் .
மேலும்
ஸஹீஹ் முஸ்லிம் : 1581
ஹாரிஸா பின் நுஅமான் (ரலி) அவர்களின் புதல்வியார் கூறியதாவது:
நான் ‘காஃப்" எனும் (50ஆவது) அத்தியாயத்தை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் வாயிலிருந்தே (அவர்களிடமிருந்து நேரடியாகவே) மனனமிட்டேன். அவர்கள் ஒவ்வொரு ஜுமுஆ (சொற்பொழி)வின்போதும் அந்த அத்தியாயத்தை ஓதுவார்கள். நாங்களும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் ஒரே அடுப்பையே பயன்படுத்திவந்தோம். (அந்த அளவிற்கு அவர்களும் நாங்களும் அக்கம் பக்கத்தில் குடியிருந்தோம்.)
அல்குர்ஆனின் சில ஆயத்துக்களை ஓதுதல் :
நூல் :அஹ்மத் : 20878
நபி ( ச ) அவர்களது குத்பா பற்றி ஜாபிர் இப்னு ஸமூரா ( வ ) அவர்கள் குறிப்பிடும் போது , ' .... மிம்பர் மீதிலிருந்து சில ஆயத்துக்களை ஓதுவார்கள் ' என்றும் குறிப்பிட்டுள்ளார்கள் .
ஸஹீஹ் புகாரி : 3266
யஃலா ( வ ) அறிவித்தார் : ' நபி ( ச ) அவர்கள் மிம்பரின் மீது நின்ற வண்ணம் , ( குற்றவாளிகள் நரகத்தின் காவலரை நோக்கி ) ' யா மாலிக் ' - ( ' மாலிக்கே ! ' ) என்று அழைப்பார்கள் ' என்னும்
( திருக்குர்ஆன் 43:77 ஆம் ) வசனத்தை ஓதுவதைக் கேட்டிருக்கிறேன்.
இதில் காணப்படும் நிறைகளுக்கு அல்லாஹ் அருள் செய்யவும் குறைகளை மன்னிக்கவும் பிரார்த்தனை செய்கின்றேன் .
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹூ.
Alhamdulillah
ReplyDelete