யார் இந்த ஷியாக்கள்?
யார் இந்த ஷியாக்கள்?
அளவற்ற அருளாளனும் கருணையன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் ஆரம்பம் செய்கிறேன்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹூ.
அல்லாஹ்வின் கடைசி இறைத்தூதர்
முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மறைவுக்கு பின்பு வந்த கலீஃபாக்களில் (இஸ்லாமிய ஆட்சி தலைவர்களில்)
ஆட்சி காலம்
அபூபக்கர் ( ரழி ) = 632-634
உமர் ( ரழி ) = 634-644
உதுமான் ( ரழி ) = 644-656
இந்த 3 கலீஃபாக்களுக்கு பின் நான்காவதாக வந்த
அலி ( ரழி ) = 656-661
அவர்களை மட்டும் இஸ்லாமிய ஆட்சி தலைவராக ஏற்றுக் கொண்டு அவர் தான் சிறந்தவர் என்றும் அதற்கு முன் இருந்த மூன்று இஸ்லாமிய தலைவர்களையும் புறக்கணித்து விட்டு. அல்லாஹ் ஒருவன் மற்றும் இறைத்தூதர் முஹம்மது நபி மற்றும் அலி (ரழி ) மற்றும் அவர்களது குடும்பத்தினர்களை சேர்த்து 12 இமாம் களை பின்பற்றுபவர்களே ஷியாக்கள் ஆகும்.
ஷியாக்கள் வரலாறு
நபி ( ஸல் ) அவர்கள் வபாத்தாகி சுமார் 30 வருடங்களுக்கு பின் உருவானதுதான் இந்த ராபிழா எனும் ஷியா பிரிவாகும் . சன்ஆ ( எமன் ) எனும் பகுதியில் வாழ்ந்த அப்துல்லாஹ் இப்னு ஸபா என்பவன் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டதாக கூறி தந்திரமான முறையில் முஸ்லிம்களுக்குள் ஊடுருவினான் . பிறப்பின் அடிப்படையில் இவன் யூதனாவான் . இவன்தான் இஸ்லாத்தின் அடிப்படை ஏகத்துவக் கொள்கைக்கு எதிரான , இஸ்லாத்திற்குக் கடுகளவும் சம்பந்தமில்லாத கொள்கைகளை , கோட்பாடுகளை முஸ்லிம்களிடம் பரப்பினான் . தூய இஸ்லாத்திற்குத் துரோகம் இழைத்த இவனும் அவனைப் பின்தொடர்ந்த கூட்டத்தினரும் தங்களுக்குத் தாங்களே சூட்டிக் கொண்ட பெயர் தான் ஷியா என்பதாகும் . இந்த அப்துல்லாஹ் இப்னு ஸபா என்பவனே ஒற்றுமையாக ஒரே உம்மத்தாக உஸ்மான் ( ரழி ) அவர்களது தலைமையின் கீழ் ஒன்றுபட்டிருந்த இஸ்லாமிய சமூகத்தை அரசியல் இலாப நோக்கைக்கொண்டும் பிளவுப்படுத்தி கலவரத்தை உண்டு பண்ணி இரத்தத்தை ஓட்டிப்பிரித்தாளும் சூழ்ச்சியை நடைமுறைப் படுத்தியவனாவான் . இறுதியில் உஸ்மான் ( ரழி ) அவர்கள் கொலை செய்யப்பட்டார்கள் . அன்று உருவாக்கிய இரத்த ஆறு இன்றுவரை ஷியா - ஸூன்னி என்று ஓடிக்கொண்டே இருக்கிறது .
ஷியாக்கள் அலி ( ரழி ) அவர்களுக்கும் அவர்களுடைய குடும்பத்தினருக்கும் ஆதரவு தெரிவிப்பதாகக் கூறியே அரசியல் பிரவேசம் செய்தனர் .
இன்னும் இவர்கள் ' நபி ( ஸல் ) அவர்களுக்குப்பின் அலி ( ரழி ) அவர்கள் தான் கிலாபத் பொறுப்புக்கு உரியவர் . அதனை அபூபக்கர் ( ரழி ) , உமர் ( ரழி ) , இருவரும் தட்டிப்பறித்துவிட்டனர் . இவர்கள்
அலி ( ரழி ) க்கு அநீதி இழைத்துவிட்டு அலியிடம் மன்னிப்புக்கோராமலே மரணித்துவிட்டனர் . எனவே அவர்கள் இருவர் மீதும் அல்லாஹ்வினதும் மக்களினதும் சாபம் உண்டாகட்டும் ' என சபிக்கின்றனர் ( நூல் . அல்காபி : 8 245 ) .
ஷியா பாங்கு & தொழுகை
சுன்னி இஸ்லாத்தின் தொழுகைக்கான அழைப்பின் (பாங்கு): "அல்லாஹு அக்பர்' என்று தொடங்கும் பாங்கின் பொருள், "இறைவன் மிகப் பெரியவன்! வணக்கத்துக்குரியவன் இறைவனைத் தவிர வேறெவரும் இல்லை. முஹம்மது இறைவனின் தூதர். தொழ வாருங்கள். வெற்றி பெற வாருங்கள்' என்பது. இதில், ஷியாக்கள் மேலும் ஒரு வரியைச் சேர்த்துக் கொள்கிறார்கள். "முஹம்மது நபி அல்லாஹ்வின் இறுதித் தூதர்; அவரது வாரிசு அலி' என்பதே அவ்வாசகம். ஐந்து வேளைத் தொழுகையை, மூன்று வேளைகளில் (இரண்டை ஒரே வேளையில்) தொழுது விடுகின்றனர் ஷியாக்கள். தொழுகையில், ஸஜ்தா எனும் சிரம் பணியும் நிலையில், "காகே ஷிபா' எனப்படும் புனித கர்பலாவின் மண்ணால் செய்யப்பட்ட "சில்' (ஓடு) ஒன்றை வைக்கிறார்கள்.
ஷியா ஹதீஸ் நூல்கள்
Al-Istibsar
Tahdhib al-Ahkam
Man La Yahduruhu al-Faqih
Kitab al-Kafi
இஸ்லாத்திற்கு மாறுபட்ட ஹதீஸ்கள்
ஷியாக்கள் கொள்கை
"தொழுகைகளைப் பேணிக் கொள்ளுங்கள்! நடுத்தொழுகையையும் பேணிக் கொள்ளுங்கள்'' என்பது திருக்குர்ஆன் வசனம். இதற்கு விளக்கம் கூறப் புகுந்த ஷியாக்களின் விரிவுரையாளர்கள் அய்யாஷ், ஹுவைஸீ ஆகிய இருவரும் பின்வருமாறு கூறுகின்றார்கள்.
(ஐந்து) தொழுகைகள் என்பது ரசூல் (ஸல்), அலீ (ரலி), ஃபாத்திமா (ரலி), ஹஸன் (ரலி), ஹுஸைன் (ரலி) ஆகிய ஐவராவர். நடுத்தொழுகை என்று விஷேசமாகக் குறிப்பிட்டது அலீ (ரலி) ஆவார்.
அய்யாஷி தப்ஸீர் பாகம் 1, பக்கம் 128,
எனக்கு முன் நபிமார்கள் உட்பட எவருக்கும் கொடுக்கப்படாத சிறப்புக்கள் எனக்குக் கொடுக்கப்பட்டுள்ளன. நடந்தது எனக்குத் தெரியாமல் நடந்திராது, நடப்பவை என்னை விட்டும் மறையாது என்று அலீ (ரலி) கூறினார்கள்.
அல்உஸுலு மினல் காபி பாகம் 19, பக்கம் 197
அலீ (ரலி) அவர்கள் திரும்பவும் இவ்வுலகுக்கு வருவார்கள் என்பது நமது கொள்கையாகும். இதை நம்பாதவன் நம்மைச் சேர்ந்தவனல்லன் என்று பாகிர் இமாம் கூறினார்களாம்.
காஷானியின் கிதாபுஸ்ஸாயி பாகம் 1 பக்கம் 837
ஷியாக்கள் கொள்கை
தகிய்யா
நுஸைர்ரியா
முத்ஆ
இன்னும் பல
ஷியாக்களின் பிரிவுகள்
அஷ்ஷைகிய்யா
அர்ரிஷ்திய்யா
நுஸைர்ரியாக்கள்
அலவியாக்கள்
இஸ்மாயீலிய்யா
துரூஸிகள்
போராக்கள்
மேலும் 👇
அல்குர்ஆன் : 9:48
நிச்சயமாக இதற்கு முன்னரும் அவர்கள் குழப்பத்தை விரும்பியிருக்கிறார்கள். உமது காரியங்களை புரட்டியும் இருக்கிறார்கள். முடிவில் சத்தியம் வந்தது. அவர்கள் வெறுக்கக் கூடியவர்களாக உள்ள நிலையில் அல்லாஹ்வுடைய காரியம் (மார்க்கம்) மேலோங்கியது.
இதில் காணப்படும் நிறைகளுக்கு அல்லாஹ் அருள் செய்யவும் குறைகளை மன்னிக்கவும் பிரார்த்தனை செய்கின்றேன் .
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹூ.
GOOD INFO THANKS FOR POSTING.
ReplyDelete👍
Delete