வெட்டுக்கிளியும் மறுமை நாளும்
வெட்டுக்கிளியும் மறுமை நாளும்
![]() |
அளவற்ற அருளாளனும் கருணையன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் ஆரம்பம் செய்கிறேன்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹூ.
Locust swarms attack என்றழைக்கப்படும் பெரிய அளவிலான வெட்டுகிளிகள் கூட்டமாக படையெடுத்து வந்து பயிர்களை உண்பது பல ஆண்டுகளாக நம் பூமியில் நடந்து வருகிறது . பாலைவனப்பகுதிகளை ஒட்டிய நாடுகளான ஈரான் , ஆஃப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து உருவாகும் இந்த வெட்டுக்கிளிகள் ஒரே நாளில் 150 கிலோமீட்டர் தூரம் வரை பயணிக்கும் ஆற்றல் கொண்டவை . பாகிஸ்தான் வழியாக இந்தியாவிற்குள் நுழைகின்றன . ஒரு சதுரகிலோமீட்டர் பரப்பளவில் இருக்கும் 4 கோடி வெட்டுக்கிளிகள் ஒரே நாளில் 80,500 கிலோ வேளாண் பயிர்களை உணவாக உட்கொள்ளும் . இது ஒரு நாளில் 35,000 மனிதர்கள் உண்ணும் உணவிற்கு சமமாகும். தற்போது இந்தியாவில் ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம், மஹாராஷ்டிரா உள்ளிட்ட பல பகுதிகளில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
இந்த வெட்டுக்கிளிகள் மனிதர்களின் வாழ்வில் இம்மை மறுமை என்ற இரு நிலைகள் உள்ளதைப்போல் ... வெட்டுக்கிளிகளின் வாழ்வில் இரு நிலைகள் உள்ளன . சாதாரணமான வெட்டுக்கிளி வாழ்க்கை ...
( Solitary Phase Locust ) .... இதற்கு அடுத்த நிலை உடலின் நிறம் , உருவம் மாற்றமடைந்து கூட்டாக ஒன்று சேர்ந்து வெளியேறும் ( Gregarious Phase Locust ) நிலை . பொதுவாக மத்திய கிழக்கு நாடுகளின் பாலைவனப் பகுதிகளில் வாழும் வெட்டுக்கிளிகள் , நிலத்தை துளைத்து நூற்றுக்கணக்கான முட்டைகளை அக்குழிகளில் இடும் . இந்த முட்டைகள் குஞ்சுகளாக வளரும் பருவத்தில் .... அப்பகுதியில் மழை பொழிந்து தாவரங்கள் பசுமையாக இருக்கும் , அவைகளை உண்டு வளர்ந்த பின்பு அவைகளின் உடலில் ஏற்படும் சில இரசாயன மாற்றத்தால் ( The Gregarisation pheromone of Locusts ) என்ற நிலைக்கு மாறும் . இப்படி நிறம் மற்றும் உருவம் மாறிய வெட்டுக்கிளிகள் , கோடிக்கணக்கில் தம் புதை குழியிலிருந்து கூட்டாக வெளியேறும் . ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு அளித்துள்ள தகவல்படி , ஒரு வெட்டுக்கிளிகளின் கூட்டம் சுமார் 60 கிலோமீட்டர் நீளமும் சுமார் 40 கிலோமீட்டர் அகலமும் இருந்ததாகக் கூறப்படுகிறது .
மறுமை நாளில் மனிதர்கள் எவ்வாறு தாங்கள் அடக்கப்பட்ட , புதை குழியிலிருந்து வெளியேறுவதை , வெட்டுக்கிளி வெளியேறுவது போல் .... என்ற ஓர் உதாரணம் மூலம் அல்லாஹ் விளக்குகின்றான் .
அல்குர்ஆன் : 54:7
( தாழ்ந்து பணிந்து ) கீழ்நோக்கிய பார்வையுடன் , அவர்கள் புதை குழிகளிலிருந்து பரவிச் செல்லும் வெட்டுக்கிளிகளைப் போல் வெளியேறுவார்கள் .
அல்குர்ஆன் : 7:57
அவன் தான் , தன்னுடைய அருள்
மாரிக்கு முன் , நற்செய்தியாக
குளிர்ந்த காற்றுகளை அனுப்பிவைக்கிறான் ; அவை கனத்த மேகங்களைச் சுமக்கலானதும் நாம் அவற்றை இறந்து கிடக்கும் ( வறண்ட ) பூமியின் பக்கம் ஓட்டிச் சென்று , அதிலிருந்து மழையைப் பொழியச் செய்கின்றோம் ; பின்னர் அதைக் கொண்டு எல்லாவிதமான கனிவகை
விளைச்சல் களையும் வெளிப்படுத்துகின்றோம் - இவ்வாறே நாம் இறந்தவர்களையும் எழுப்புவோம் .
எனவே இவற்றை யெல்லாம் சிந்தித்து நீங்கள் நல்லுணர்வு பெறுவீர்களாக .
ஸஹீஹ் முஸ்லிம் : 5661
அல்லாஹ்வின் தூதர் ( ஸல் ) அவர்கள் கூறினார்கள் : ஆதமின் மகனின் ( மனிதனின் உடலிலுள்ள ) அனைத்துப் பகுதிகளையும் மண் தின்றுவிடும் ; மனிதனின்
( முதுகுத்தண்டின் வேர்ப்பகுதியிலிருக்கும் ) உள்வால் எலும்பின் நுனியைத் தவிர ! அதை வைத்தே அவன் ( தன் தாயின் கருவறையில் முதன் முதலாக ) படைக்கப்பட்டான் . அதிலிருந்தே அவன்
( மீண்டும் மறுமை நாளில் ) படைக்கப்படுவான் . இதை அபூஹுரைரா ( ரலி ) அவர்கள் அறிவிக்கிறார்கள் .
அல்குர்ஆன் : 7 : 133
ஆகவே அவர்கள் மீது , கனமழையையும் , வெட்டுக்கிளியையும் , பேனையும் , தவளைகளையும் , இரத்தத்தையும் தெளிவான அத்தாட்சிகளாக
( ஒன்றன்பின் ஒன்றாக ) அனுப்பி வைத்தோம் - ஆனால் அவர்கள் பெருமையடித்து குற்றம் புரியும் சமூகத்தாராகவே ஆகியிருந்தனர் .
அல்குர்ஆன் : 16:38
இறந்தவர்களை அல்லாஹ்
( உயிர்ப்பித்து ) எழுப்ப மாட்டான் என்று அவர்கள் அல்லாஹ்வின் மீது பிரமாணமாகச் சத்தியம் செய்கிறார்கள் . அப்படியல்ல ! ( உயிர் கொடுத்து எழுப்புவதான அல்லாஹ்வின் ) வாக்கு மிக்க உறுதியானதாகும் ; எனினும் மக்களில் பெரும்பாலோர் இதை அறிந்து கொள்வதில்லை .
அல்குர்ஆன் : 16:44
தெளிவான அத்தாட்சிகளையும் வேதங்களையும் ( அத்தூதர்களுக்கும் கொடுத்தனுப்பினோம் ; நபியே ! ) மனிதர்களுக்கு அருளப்பட்டதை நீர் அவர்களுக்கு தெளிவுபடுத்துவதற்காகவும் அவர்கள் சிந்திப்பதற்காகவும் உமக்கு இவ்வேதத்தை நாம் அருளினோம் .
மனிதர்களுக்கு அருளப்பட்ட கடைசி இறை வேதமான அல்குர்ஆன் மனிதர்களுக்கு தெளிவான பல அத்தாட்சிகளை கொண்டுள்ளது. ஒவ்வொரு மொழி கூட்டத்திற்கு ஏற்றவாறு மொழி பெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது. ஆகவே அல்குர்ஆனை தம் தாய் மொழியில் படித்து புரிந்து கொண்டு. மறுமைக்கு தேவையான பல நல் அமல்களை செய்து அல்லாஹ்விடம் இம்மையிலும் மறுமையிலும் நாம் வெற்றியாளர்களாக ஆக்கி அருள் புரிவானாக. ஆமீன்
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹூ.
very good information
ReplyDeleteJazakallahu khair
Deleteயார் இந்த ஷியாக்கள் என்ற தலைப்பில் கட்டூரை எழுதவும்.
ReplyDeleteInsha Allah
Delete