திக்ரு


திக்ரு 



அளவற்ற அருளாளனும் கருணையன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் ஆரம்பம் செய்கிறேன் .


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹூ.



திக்ரு என்றால் இறை நினைவு, தியானம், இறைவனை துதிப்பது, 
இறைவனிடம் பிரார்த்திப்பது.


நம்மில் பலர் அன்றாட வாழ்வில் தொழுகை, நோன்பு, ஜகாத், போன்றவை போல் திக்ரு க்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. அல்லாஹ்வின் திக்ரு மிக பெரிய சக்தியாகும். மேலும் நபியவர்கள் எல்லா நிலைகளிலும் திக்ரு செய்பவர்களாக இருந்தார்கள். 


ஆகவே இன்ஷா அல்லாஹ் நம் அனைவரையும் திக்ரு செய்ய கூடிய நல் மக்களாக ஆக்கி அருள் புரிவானாக. ஆமீன் 


அல்குர்ஆன் : 33:41

ஈமான் கொண்டவர்களே ! அல்லாஹ்வை அதிகமதிகமான திக்ரைக் கொண்டு திக்ரு ( தியானம் ) செய்யுங்கள் .



அல்குர்ஆன் : 2:152

 ஆகவே , நீங்கள் என்னை நினைவு கூறுங்கள் ; நானும் உங்களை நினைவு கூறுவேன் . இன்னும் , நீங்கள் எனக்கு நன்றி செலுத்துங்கள் ; எனக்கு மாறு செய்யாதீர்கள் .



அல்குர்ஆன் : 29:45

    ( நபியே ! ) இவ்வேதத்திலிருந்து உமக்கு அறிவிக்கப்பட்டதை நீர் எடுத்தோதுவீராக ; இன்னும் தொழுகையை நிலை நிறுத்துவீராக ; நிச்சயமாக தொழுகை ( மனிதரை ) மானக்கேடானவற்றையும் தீமையையும் விட்டு விலக்கும் . நிச்சயமாக , அல்லாஹ்வின் திக்ரு ( தியானம் ) மிகவும் பெரிதான சக்தியாகும் ; அன்றியும் அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கறிகிறான் .



அல்குர்ஆன் : 13:28

  ( நேர் வழி பெறும் ) அவர்கள் எத்தகையோரென்றால் , அவர்கள் தாம் ( முற்றிலும் ) ஈமான் கொண்டவர்கள் ; மேலும் , அல்லாஹ்வை நினைவு கூர்வதால் அவர்களுடைய இதயங்கள் அமைதி பெறுகின்றன ; அல்லாஹ்வை நினைவு கூர்வது கொண்டு தான் இதயங்கள் அமைதி பெறுகின்றன என்பதை அறிந்து கொள்க !



அல்குர்ஆன் : 7:205

 ( நபியே ! ) நீர் உம் மனதிற்குள் மிக்க பணிவோடும் , அச்சத்தோடும் ( மெதுவாக உரத்த சப்தமின்றி காலையிலும் , மாலையிலும் உம் இறைவனின் ( திருநாமத்தை ) திக்ரு செய்து கொண்டு இருப்பீராக ! ( அவனை ) மறந்து விட்டிருப்போரில் ஒருவராக நீர் இருக்க வேண்டாம் .



ஸஹீஹ் முஸ்லிம் : 608

     ஆயிஷா ( ரலி ) அவர்கள் கூறியதாவது : நபி ( ஸல் ) அவர்கள் எல்லா நிலைகளிலும் அல்லாஹ்வை திக்ர் செய்பவர்களாய் இருந்தார்கள்.- இதை உர்வா ( ரஹ் ) அவர்கள் அறிவிக்கிறார்கள் . இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது .


ஸஹீஹ் புகாரி : 6405

சுப்ஹானல்லாஹ் ( அல்லாஹ் தூயவன் என்று கூறுவதன் சிறப்பு  இறைத்தூதர் ( ஸல் ) அவர்கள் கூறினார்கள்
 சுப்ஹானல்லாஹ் வபி ஹம்திஹி
 ( அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்து துதிக்கிறேன் ) என்று யார் ஒரு நாளில் நூறு முறை சொல்வாரோ அவரின் தவறுகள் அழிக்கப்பட்டுவிடுகின்றன . அவை கடலின் நுரை போன்று 
( மிகுதியாக ) இருந்தாலும் சரியே என அபூ ஹுரைரா ( ரலி ) அறிவித்தார் . 




ஸஹீஹ் புகாரி : 6406

     இறைத்தூதர் ( ஸல் ) அவர்கள் கூறினார்கள் இரண்டு வாக்கியங்கள் நாவுக்கு எளிதானவையாகும் . 
 நன்மை தீமை நிறுக்கப்படும் . தராசில் கனமானவையாகும் . 
அளவற்ற அருளாளின் பிரியத்திற்குரியவையுமாகும் . ( அவை :) சுப்ஹானல்லாஹில் அழீம் , சுப்ஹானல்லாஹி வபி ஹம்திஹி .
 ( பொருள் : கண்ணியமிக்க அல்லாஹ்வைத் துதிக்கிறேன் அவனைப் போற்றிப் புகழ்ந்து துதி செய்கிறேன் . )





ஸஹீஹ் புகாரி : 6318

 அலி இப்னு அப தாலிப் 
( ரலி ) அறிவித்தார் .
அல்லாஹு அக்பர் ( அல்லாஹ் பெரியவன் ) என்று முப்பத்து நான்கு முறையும் , சுப்ஹானல்லாஹ் 
( அல்லாஹ் தூயவன் ) என்று முப்பத்து மூன்று முறையும் , அல்ஹம்துலில்லாஹ் 
( புகழ் யாவும்அல்லாஹ்வுக்கே ) என்று முப்பத்து மூன்று முறையும் சொல்லுங்கள் . இது பணியாளைவிட உங்கள் இருவருக்கும் சிறந்ததாகும் . என்றார்கள் . இப்னு சீரீன் ( ரஹ் ) அவர்கள் சுப்ஹானல்லாஹ் என முப்பத்து நான்கு முறை கூற வேண்டும் ' என்று அறிவித்தார்கள் .



ஸஹீஹ் புகாரி : 6319

உறங்கப் போகும் போது இறைவனிடம் பாதுகாப்புக் கோருவதும் ( குர்ஆன் அத்தியாயங்களை ) ஓதுவதும் .
 ஆயிஷா ( ரலி ) அறிவித்தார் . இறைத்தூதர் ( ஸல் ) அவர்கள் படுக்கைக்குச் சென்றால் இறைப் பாதுகாப்புக் கோரும் 
( 112 , 113 , 114 ஆகிய மூன்று ) அத்தியாயங்களை தம் மேனியில் தடவிக் கொள்வார்கள் .




ஸஹீஹ் புகாரி : 6409

“ லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லாபில்லாஹ் ' என்று கூறுவது . 
 அபூ மூஸா அப்தில்லாஹ் இப்னு கைஸ் அல் அஷ் . அரீ( ரலி ) அறிவித்தார் . 
( நாங்கள் கைபர் பயணத்தில் இருந்த போது ) நபி ( ஸல் ) அவர்கள் ஒரு குன்றில் அல்லது மேட்டில் ஏறலானார்கள் . அதன் மீது ஏறியபோது ஒருவர் உரத்த குரலில் லாயிலாஹ இல்லல்லாஹு வல்லாஹு அக்பர் ' 
( வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை . அல்லாஹ் மிகப் பெரியவன் ) என்று முழங்கினார் . இறைத்தூதர் ( ஸல் ) அவர்கள் , தம் கோவேறு கழுதையில் இருந்தபடி , 
( மெதுவாகக் கூறுங்கள் . ) ஏனெனில் , நீங்கள் காது கேளாதவனையோ இங்கு இல்லாதவனையோ அழைப்பதில்லை ' என்று கூறினார்கள் . பிறகு , அபூ முஸா ! அல்லது அப்துல்லாஹ் ( என்று என்னைக் கூப்பீட்டு ) சொர்க்கத்தின் கருவூலமான ஒரு வார்த்தையை உமக்கு நான் அறிவித்துத் தரட்டுமா ? என்று கேட்டார்கள் . நான் , ஆம் 
( அறிவித்துத்தாருங்கள் ) ' என்று கூறினேன் . நபி ( ஸல் ) அவர்கள் , 
( அந்த வார்த்தை :) 
லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லாபில்லாஹ் 
அல்லாவின் உதவியன்றி பாவங்களிலிருந்து விலகிச் செல்லவோ , நல்லறங்கள் புரிய வலிமை பெறவோ மனிதனால் இயலாது ' என்றார்கள் .




ஸஹீஹ் புகாரி : 6403

 இறைத்தூதர் ( ஸல் ) அவர்கள் கூறினார்கள் 
 லாயிலாஹ இல்லல்லாஹு , வஹ்தஹு , லா ஷரீக்க லஹு , லஹுல் முல்க்கு , வலஹுல் ஹம்து . வஹுவ அலா குல்லி ஷையின் கதீர். 



மேலும் தஸ்பீஹ் சொல்லும் போது கை விரல்கள் மூலம் கணக்கிட்டு கொள்ளலாம். 

👇👇👇

அல்குர்ஆன் : 36:65

 அந்த நாளில் நாம் அவர்களின் வாய்களின் மீது முத்திரையிட்டு விடுவோம் ; அன்றியும் அவர்கள் சம்பாதித்துக் கொண்டிருந்தது பற்றி அவர்களுடைய கைகள் நம்மிடம் பேசும் ; அவர்களுடைய கால்களும் சாட்சி சொல்லும் .


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹூ. 


Comments