இரவுத் தொழுகை

இரவுத் தொழுகை 




அளவற்ற அருளாளனும் கருணையன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் ஆரம்பம் செய்கிறேன் .

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹூ



இஸ்லாத்தின் ஐந்து கடமைகளில் நம் வாழ்க்கையில் அன்றாடம் செய்யும் தொழுகை முதன்மையானது. 
தொழுகையில் பர்ளு, சுன்னத், நஃபில், வாஜிபு, என்றும் பல பெயர்களில் நமக்கு நபியவர்கள் கற்றுத் தந்துள்ளார்கள். பர்ளு தொழுகைக்கு அடுத்து அதிக சிறப்புகள் அடங்கிய தொழுகை இந்த இரவுத் தொழுகையாகும்.

இரவுத் தொழுகை (நஃபில்) உபரியான தொழக்கூடிய தொழுகையாகும். 

இரவுத் தொழுகையை நபியவர்கள் ரமலானிலும், ரமலான் அல்லாத மாதங்களிலும் தொழுதார்கள். 

இரவுத் தொழுகை (தஹஜ்ஜுத் +வித்ரு) 
பிற்காலத்தில் தராவீஹ் என்று சொல்லப்பட்டது. 


இரவுத் தொழுகை உபரியான தொழக்கூடிய தொழுகை என்பதால்
இதில் எத்தனை ரக் அத் தொழ வேண்டும் என்பதில் மக்களிடையே பல கருத்து வேறுபாடுகள் உள்ளது. 7,9,11,13,20,23, 36

 எனவே ஹதீஸ் ஆதாரங்கள் மூலமாக நாம் பார்ப்போம். 



 ஸஹீஹ் புகாரி :1139 

   நபி ( ஸல் ) அவர்களின் இரவுத் தொழுகை பற்றி ஆயிஷா ( ரலி ) அவர்களிடம் கேட்டேன் . அதற்கவர்கள் ,  ஃபஜ்ருடைய ஸுன்னத் இரண்டு ரக்அத்கள் தவிர பதினொரு ரக்அத்கள் ,  ( சிலசமயம் ) ஒன்பது ரக்அத்கள் , ( சில சமயம் ) ஏழு ரக்அத்கள் ( நபி ( ஸல் ) அவர்கள் தொழுவார்கள் ) " என்று விடையளித்தார்கள் . 
அறிவிப்பவர் : மஸ்ரூக் 




 ஸஹீஹ் புகாரி : 2013

அபூ ஸலமா இப்னு அப்திர் ரஹ்மான் 
 ( ரஹ் ) கூறினார் : “ நபி ( ஸல் ) அவர்களின் தொழுகை ரமளானில் எவ்வாறு இருந்தது ? ' என்று ஆயிஷா
 ( ரலி ) அவர்களிடம் கேட்டேன் . அதற்கவர் ,  ரமளானிலும் ரமளான் அல்லாத மாதங்களிலும் பதினனொரு ரக்அத்களை விட அதிகமாக நபி ( ஸல் ) அவர்கள் தொழமாட்டார்கள் நான்கு ரக்அத்கள் தொழுதார்கள் அதன் அழகையும் நீளத்தையும் பற்றிக் கேட்காதே ! பின்னர் நான்கு ரக்அத்கள் தொழுவார்கள் அதன் அழகையும் நீளத்தையும் பற்றிக் கேட்காதே . பின்னர் மூன்று ரக்அத்கள் தொழுவார்கள்  என்று கூறினார் . மேலும் ஆயிஷா ( ரலி ) அவர்கள் கூறினார்கள் . நபி அவர்களே ! வித்ருத் தொழுவதற்கு முன் நீங்கள் உறங்குகிறீர்களே ?
 ( உளு நீங்கி விடுமே ) என்று கேட்டேன் . அதற்கு நபி ( ஸல் ) அவர்கள் , ' ஆயிஷாவே ! என் கண்கள் தாம் உறங்குகின்றன் என் உள்ளம் உறங்குவதில்லை ' ' எனக் கூறினார்கள் .




ஸஹீஹ் முஸ்லிம் : 1339

  நபி ( ஸல் ) அவர்கள் இரவில் பதினோரு ரக்அத்கள் தொழுவார்கள் . அவற்றில் ஒரு ரக்அத்தைவித்ராகத் தொழுதார்கள் . தொழுது முடித்த பின் 
( தம்மை அழைப்பதற்காக ) தொழுகை அறிவிப்பாளர் தம்மிடம் வரும் வரை வலப்பக்கம் சாய்ந்து படுத்திருப்பார்கள் . ( அவர் ) வந்ததும் ( எழுந்து ) சுருக்கமாக இரண்டு ரக்அத்கள் ( ஸுப்ஹுடைய சுன்னத் ) தொழுவார்கள் . அறிவிப்பவர் : ஆயிஷா ( ரலி )




ஸஹீஹ் புகாரி : 1138

  நபி ( ஸல் ) அவர்கள் இரவில் பதிமூன்று ரக்அத்கள் தொழுதார்கள் . அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் ( ரலி ) 




ஸஹீஹ் புகாரி : 183

 நபி ( ஸல் ) அவர்களின் மனைவியும் என்னுடைய சிறிய தாயாருமான மைமூனாவின் வீட்டில் நான் தலையணையின் பக்க வாட்டில் சாய்ந்து தூங்கினேன் . நபி ( ஸல் ) அவர்களும் அவர்களின் மனைவியும் அதன் மற்ற பகுதியில் தூங்கினார்கள் . இரவின் பாதிவரை - கொஞ்சம் முன் பின்னாக இருக்கலாம் நபி ( ஸல் ) தூங்கினார்கள் . பின்னர் விழித்து அமர்ந்து தங்களின் கையால் முகத்தைத் தடவித் தூக்கக் கலக்கத்தைப் போக்கினார்கள் . பின்னர் ஆலு இம்ரான் என்ற அத்தியாயத்தின் இறுதியிலுள்ள பத்து வசனங்களை ஓதினார்கள் .பின்னர் எழுந்து சென்று தொங்கவிடப்பட்டிருந்த பழைய தோல் பையிலிருந்து ( தண்ணீர் எடுத்து ) உளூச் செய்தார்கள் . அவர்களின் உளூவை நல்ல முறையில் செய்தார்கள் . பின்னர் தொழுவதற்காக எழுந்தார்கள் . நானும் எழுந்து நபி ( ஸல் ) அவர்கள் செய்தது போன்று ( உளூ ) செய்துவிட்டு நபி ( ஸல் ) அவர்களின் அருகில் சென்று நின்றேன் . அவர்கள் தங்களின் வலக்கரத்தை என் தலைமீது வைத்தார்கள் . என்னுடைய வலக்காதைப் பிடித்து ( அவர்களின் வலப்பக்கம் ) நிறுத்தினார்கள் . இரண்டு ரக்அத்துகள் தொழுதார்கள் .மேலும் இரண்டு ரக்அத்துகள் , மீண்டும் இரண்டு ரக்அத்துகள் , இன்னும் இரண்டு ரக்அத்துகள் மறுபடியும் இரண்டு ரக்அத்துகள் மேலும் இரண்டு ரக்அத்துகள் தொழுதார்கள் பின்பு வித்ரு தொழுதார்கள் . பின்னர் பாங்கு சொல்பவர் வரும் வரை சாய்ந்து படுத்தார்கள் . பிறகு எழுந்து சுருக்கமாக இரண்டு ரக்அத்துகள் தொழுதுவிட்டு சுபுஹுத் தொழுகைக்காக ( வீட்டைவிட்டு வெளியே சென்றார்கள் ' என இப்னு அப்பாஸ் ( ரலி ) அறிவித்தார் .




மேலே நாம் பார்க்கப்பட்ட ஹதீஸ்கள் ஆதாரப்பூர்வமானவை.. இதில் 20, 23,36ரக் அத் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. மேலும் 20 ரக் அத் திற்கு பலவீனமான ஆதாரம் பலவீனமான அறிவிப்பாளர்கள். 



மேலும் நம் கலிமா.. அல்லாஹ்வை வணங்கியும். திருத்தூதர் நபியவர்கள் பின்பற்றுவதாகும். 




அல்குர்ஆன் : 47:33

ஈமான் கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு வழிபடுங்கள். இன்னும் இத்தூதருக்கு கீழ்ப்படியுங்கள் - உங்கள் செயல்களை பாழாக்கிவிடாதீர்கள்.




ஸஹீஹ்புகாரி : 1137

இப்னு உமர் ( ரலி ) அறிவித்தார் . ஒருவர் நபி ( ஸல் ) அவர்களிடம் ' இறைத்தூதர் அவர்களே ! இரவுத் தொழுகை 
எவ்வாறு ? ' என்று கேட்டதற்கு நபி 
( ஸல் ) அவர்கள் ' இரண்டிரண்டு ரக்அத்களாகத் தொழ வேண்டும் . ஸுப்ஹை ( நேரம் வந்துவிடுமென ) நீர் அஞ்சினால் ஒரு ரக்அத் வித்ருத் தொழுவீராக ' என்று விடையளித்தார்கள் . 




ஸஹீஹ் புகாரி : 998

   இறைத்தூதர் ஸல் அவர்கள் கூறினார்கள் : ' இரவுகளின் கடைசித் தொழுகையாக வித்ரை ஆக்கிக் கொள்ளுங்கள் ' . 
என இப்னு உமர் ( ரலி ) அறிவித்தார் .




எனவே நபியவர்களை பின்பற்றி 
2+2+2+2 = 8(நபில்) +3 (வித்ரு) தொழலாம். அல்லது மேலே கூறிய நபியவர்கள் 
ஹதீஸ் படியும் தொழலாம். 


மேலும் சிலர் குழப்பத்தில் இருக்கிறோம் என்றால் அல்லாஹ்விடம் துஆ செய்வோம்.. அல்லாஹ் 
தெளிவு படுத்துவான். 


👇👇👇


 அல்குர்ஆன் : 30:32

எவர்கள் தங்கள் மார்க்கத்தில் பிரிவினைகளை உண்டாக்கி (பல) பிரிவுகளாகப் பிரிந்து விட்டனரோ; (அவர்களில் ஆகி விட வேண்டாம். அவ்வாறு பிரிந்த) ஒவ்வொரு கூட்டத்தாரும் தங்களிடமிருப்பதைக் கொண்டே மகிழ்வடைகிறார்கள்.


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹூ.















Comments

Post a Comment