ஜும்ஆ தொழுகையை வீட்டில் தொழலாமா

   ஜும்ஆ தொழுகையை வீட்டில் தொழலாமா 



அளவற்ற அருளாளனும் கருணையன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் ஆரம்பம் செய்கிறேன் .

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹூ..

அன்பார்ந்த சகோதரர்களே..!

உலக அளவில் கொரோனா என்ற நோய் தொற்றால் உலகம் முழுவதும் வீட்டில் முடங்கிக் கிடக்கும் இந்த நேரத்தில் பள்ளிவாசல் மூடிய இந்த தருணத்தில் ஐந்து வேளை தொழுகையை நம் வீடுகளில் நிறைவேற்றி கொண்டிருக்கிறோம். மேலும் வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகையை வீட்டில் தொழலாமா தொழக்கூடாதா அல்லது லுஹர் தொழுகை தான் தொழுவனுமா 2 ரக் அத் அல்லது 4 ரக் அத் ஆ ஜமாத்தோடு தொழுவதற்கு 40 பேர் தேவையா அல்லது 3 பேர் போதுமா. என்று பலரும் குழப்பத்தில் இருக்கிறார்கள்.

பதில் :ஜும்ஆ தொழுகையை இக்கட்டான இந்த சூழ்நிலையில் வீட்டில் தொழலாம்.

ஜும்ஆ என்றால் தமிழில் வெள்ளிக்கிழமை என்று பொருள்..ஜும்ஆ தனியாக தொழுவது கூடாது ஜமாத்தோடு தொழ வேண்டும். ஜமாத் 3 பேர் போதுமானது. ஜும்ஆ என்றால் வெள்ளிக்கிழமை என்று தான் அர்த்தம் எனவே 2 ரக் அத் தொழ வேண்டும்.

வீட்டில் ஜூம்ஆ தொழுகை யில் பாங்கு சொல்லிய பிறகு. இமாம் இரண்டு சொற்பொழிவுகள்(குத்பா) நிகழ்த்த வேண்டும் குர்ஆன் அல்லது ஹதீஸ் விளக்கம். இரண்டு சொற்பொழிவுகளுக்கு இடையில் சிறு அமர்தல். பிறகு மு அத்தின் இகாமத் சொல்லி இமாம் இரண்டு ரக் அத் தொழுவ வேண்டும்.



ஹதீஸில் ஆதாரங்கள் :

அபூதாவூத் :1127

 ஜும்ஆ தினத்தன்று ஒருவர் தனது இடத்தில் இரண்டு ரக்அத்துகளை தொழ இப்னு உமர் கண்டார்கள் . உடனே அவரைத் தடுத்து விட்டார்கள் . மேலும் நீ ஜும்ஆவை நான்காகத் தொழுகின்றாயா ? என்று கேட்டார்கள் . அப்துல்லாஹ் பின் உமர் அவர்கள் ஜும்ஆ தினத்தில் இரண்டு ரக்அத்துகளை தனது வீட்டில் தொழுபவர்களாக இருந்தனர் . இவ்வாறே அல்லாஹ்வின் திருத்தூதர்    ( ஸல் ) அவர்கள் செய்தார்கள் என்றும் கூறினார்கள் . அறிவிப்பவர் : நாஃபி குறிப்பு : இந்த ஹதீஸ் இதே கருத்தில் வேறு விதமாக முஸ்லிம் , திர்மிதி , நஸயீ , இப்னுமாஜா ஆகியவற்றில் இடம் பெற்றுள்ளது .



அபூதாவூத் : 1068

   மதினாவில் அல்லாஹ்வின் திருத்தூதர் ( ஸல் ) அவர்களின் பள்ளியில் கூட்டப்பட்ட ஜும்ஆவிற்குப் பிறகு பஹ்ரைனிலுள்ள ஜுவாஸா என்ற கிராமத்தில் கூட்டப்பட்ட ஜும்ஆவே இஸ்லாத்தில் கூட்டப்பட்ட முதல் ஜும்ஆவாகும் . அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் ( ரலி ) இந்த கிராமம் அப்துல் கைஸ் கூட்டத்தாரின் கிராமமாகும் என இதன் அறிவிப்பாளர் உஸ்மான் கூறுகின்றார் . குறிப்பு : இந்த ஹதீஸ் புகாரியிலும் இடம் பெறுகின்றது .



அபூதாவூத் : 1069

 கஃப் பின் மாலிக் அவர்கள் ஜும்ஆவுடைய அழைப்பை செவியுறும் போது அஸ்அத் பின் ஜஸுராரா அவர்களுக்காக பிரார்த்தனை செய்வார்கள் . நான் அவர்களிடம் , " நீங்கள் ஜும்ஆவுக்கான அழைப்பை செவியுறும் போது அஸ்அத் பின் சுராராவுக்காக பிரார்த்தனை செய்கின்றீர்களே ? என்று கேட்டேன் . அதற்கு அவர்கள் , " நகீவுல் ஹலுமாத் என்று அழைக்கப்படக்கூடிய தண்ணீர் நிறைந்த பகுதியான ( அன்சாரிகள் கிளையைச் சார்ந்த ) பனூ பயாளாவின் கருங்கற்களைக் கொண்ட நிலத்தில் ஹஸ்முன் நபீத் என்ற இடத்தில் எங்களை ஜும்ஆவுக்காக வேண்டி திரட்டிய முதல் நபர் அவர்தான் " என்று பதில் கூறினார்கள் . " அன்றைய தினம் எத்தனை பேர் இருந்தீர்கள் " என்று கேட்டேன் . அதற்கு " நாற்பது பேர் " என்று பதில் சொன்னார்கள் . அறிவிப்பவர் : தனது தந்தை வழியாக அப்துர் ரஹ்மான் பின் கஃப் பின் மாலிக்



அபூதாவூத் : 1057

  ஹுனைன் போர் நாளன்று மழை நாளாக ஆகிவிட்டது . எனவே நபி ( ஸல் ) அவர்கள் தன்னுடைய அழைப்பாளருக்கு தொழுகை குடில்களில்தான் தொழுது கொள்ளுங்கள் என அறிவிக்குமாறு கட்டளையிட்டார்கள் . அறிவிப்பவர் : தன் தந்தை வழியாக அபுல் மலீஹ்




அல்குர்ஆன் : 10:87

            ஆகவே , மூஸாவுக்கும் , அவருடைய சகோதரருக்கும் : “ நீங்கள் இருவரும் உங்கள் சமூகத்தாருக்காக பட்டிணத்தில் வீடுகளை அமைத்துக் கொடுங்கள் ; உங்களுடைய அவ்வீடுகளையே பள்ளிகளாக. (கிப்லாவாக ) ஆக்கி அவற்றில் தவறாமல் தொழுகையை நிலைநிறுத்துங்கள் - மேலும் , நம்பிக்கை கொண்டவர்களுக்கு நற்செய்திகளும் கூறுவீராக ! ” என்று வஹீ அறிவித்தோம். 



அபூதாவூத் : 453  

அனஸ் ( ரலி ) அறிவிப்பதாவது : அல்லாஹ்வின் தூதர் ( ஸல் ) அவர்கள் மதீனாவிற்கு வந்த போது பனூ அம்ர் பின் அவ்ப் என்றழைக்கப்படும் கூட்டத்தார்கள் வாழும் மதீனாவின் மேட்டுப் பகுதியில் இறங்கி அவர்களிடம் பதினான்கு இரவுகள் தங்கினார்கள் . பிறகு நஜ்ஜார் கிளையினரை அழைத்து வர ஆள் அனுப்பினார்கள் . நஜ்ஜார் கிளையினர் தோள்களில் வாள்களை தொங்கப் போட்டுக் கொண்டு வந்தனர் . அல்லாஹ்வின் தூதர் ( ஸல் ) அவர்களும் அவர்களுக்குப் பின்னால் அபூபக்ர் ( ரலி ) யும் வாகனத்தில் அமர்ந்திருக்கும் காட்சியை இப்போது நான் பார்ப்பது போல் இருக்கின்றது என்று அனஸ் ( ரலி ) அறிவிக்கின்றார் . நஜ்ஜார் கிளைத் தலைவர்கள் நபி (ஸல் ) அவர்களை சூழ்ந்து விட்டதும் தனது வாகனத்தை விட்டார்கள் . அல்லாஹ்வின் தூதர் ( ஸல் ) அவர்களுக்கு தொழுகை நேரம் ஆனதும் அந்த இடத்திலேயே தொழுபவர்களாகவும் , ஆட்டுத் தொழுவங்களில் தொழுபவர்களாகவும் இருந்தனர் . அப்போது தான் அவர்கள் பள்ளி கட்டுமாறு உத்தரவிட்டு உடனே.     ( நஜ்ஜார் கிளையாரை நோக்கி ) நஜ்ஜார் கிளையாரே ! உங்களுடைய இந்த தோட்டத்தை எனக்கு விலைக்கு தாருங்கள் என்று நபி ( ஸல் ) கேட்டனர் . அதற்கு அவர்கள் அல்லாஹ்வின் மீது ஆணையாக ! அதனுடைய விலையை      ( கூலியை ) அல்லாஹ்விடத்திலேயே தவிர வேறு யாரிடத்திலும் பெறமாட்டோம் என்று பதில் சொன்னார்கள் . நான் பின்னால் சொல்லும் செய்தியும் பள்ளி கட்டுவது தொடர்பானதுதான் என்று கூறி அனஸ்   ( ரலி ) மேலும் அறிவிப்பதாவது : அந்த இடத்தில் இணை வைப்பவர்களுடைய கப்ருகள் இருந்தன . பாழடைந்த பொருட்கள் அதில் கிடந்தன . அதில் பேரீத்த மரங்களும் இருந்தன . அல்லாஹ்வின் தூதர் ( ஸல் ) அவர்களின் கட்டளை படி இணைவைப்பவர்களின் அடக்கத் தலங்கள் தோண்டப்பட்டன . பாழடைந்த பொருட்கள் சரிசமமாக்கப் பட்டன . பேரீத்த மரங்கள் வெட்டப் பட்டன . பள்ளியின் கிப்லா திசையில் பேரீத்த மரக்கட்டைகளை நட்டினார்கள் . அதன் வாசலின் இருநிலைகளையும் செங்கற்களால் அமைத்தனர் . நபித் தோழர்கள் பாடிக்கொண்டே பாறைகளை நகற்றிக் கொண்டிருந்தார்கள் . நபி ( ஸல் ) அவர்களுடன் சேர்ந்து யா அல்லாஹ் மறுமை நன்மையை தவிர வேறு எந்த நன்மையும் கிடையாது . அன்சாரிகளுக்கும் முஹாஜிர்களுக்கும் நீ உதவி புரிவாயாக ! என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள் . குறிப்பு : இந்த ஹதீஸ் புகாரி , முஸ்லிம் , நஸயீ , இப்னுமாஜா. 


அபூதாவூத் : 489

 பூமி ( அனைத்தும் ) தூய்மையானதாகவும் , தொழுமிடமாகவும் எனக்கு அறிவிக்கப்பட்டுள்ளது என்று அல்லாஹ்வின் தூதர் ( ஸல் ) அவர்கள் கூறினார்கள் என அபூதர் ( ரலி ) அறிவிக்கின்றார் .  ( குறிப்பு : இந்த ஹதீஸ் புகாரி , முஸ்லிம் , நஸயீ , இப்னு மாஜாவில் பதிவாகியுள்ளது . )



அபூதாவூத் : 547

 கிராமம் மற்றும் பாலை வனப்பகுதிகளில் மூன்று பேர்கள் வசித்துக் கொண்டிருக்கும் போது ( கூட்டுத் ) தொழுகை நடத்தப் படவில்லை எனில் , சைத்தான் அவர்கள் மீது ஆதிக்கம் செலுத்தாமலிருப்பதில்லை எனவே , நீ ஜமாஅத்தை கடைபிடித்துக் கொள்க ! ( தனித்து ) ஒதுங்கிய ஆட்டினைத்தான் ஓநாய் சாப்பிட்டு விடுகின்றது என்று அல்லாஹ்வின் தூதர் ( ஸல் ) அவர்கள் கூற நான் செவிமடுத்தேன் என அபூதர்தா ( ரலி ) அறிவிக்கின்றார்கள் . இந்த ஹதீஸ் நஸயீ - ல் இடம் பெறுகின்றது . ஜமாஅத்தை கடைபிடித்து கொள்க ! என்றால் கூட்டுத் தொழுகையை கடைபிடித்துக் கொள்க ! என்று விளக்கம் ஆகும் என ஸாயிப் கூறியதாக ஸாயிதா தெரிவிக்கின்றார் .




*உரையை துவங்குவதற்கு முன் நபி (ஸல்) * அவர்கள் கூறியவைகள்.

*அரபு, தமிழ் & அர்த்தம்*


إن الحمد لله نحمده ونستعينه ونستغفره، ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له، ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمداً عبده ورسوله.

*இன்னல்ஹம்(d)தலில்லாஹி நஹ்ம(d)துஹு வநஸ்தஈநுஹு வநஸ்(th)தஃபிருஹ், வநவூ(d)து பில்லாஹி மின் ஷுரூரி அன்ஃபுஸினா வ மின் ஸய்யிஆத்தி அஃமாலினா, மய்யஹ்(d)திஹில்லாஹு ஃபலா மு(dh)ழிள்ளலாஹ், வமய் யு(dh)ழ்லில் ஃபலா ஹாதியலாஹ், வ அஷ்ஹ(d)து அல்லா இலாஹா இல்லல்லாஹு வஹ்(d)தஹு லா ஷரீ(k)கலஹு வ அஷ்ஹ(d)து அன்ன முஹம்ம(d)தன் அ(b)ப்(d)துஹு வரசூலுஹ்.*


நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! அவனையே நாம் புகழ்கிறோம்; அவனிடமே நாம் உதவி தேடுகிறோம். நம்முடைய மன இச்சைகளின் கெடுதிகளை விட்டும், நம்முடைய செயல்களின் தீமைகளை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடுகிறோம். யாருக்கு அல்லாஹ் நேர்வழி காட்டுவானோ, அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. யாரை அல்லாஹ் வழிகேட்டில் விட்டுவிடுவானோ, அவரை நேர்வழியில் செலுத்துபவர் யாரும் இல்லை. இன்னும், நான் சாட்சி சொல்கிறேன்: "அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாரும் இல்லை. அவன் தனித்தவன்; அவனுக்குக் கூட்டாளி யாரும் இல்லை.' மேலும், நான் சாட்சி சொல்கிறேன்: "நிச்சயமாக முஹம்மது, அவனுடைய அடியாரும் அவனுடைய தூதரும் ஆவார்.' 

அறிவிப்பவர்: *இப்னு அப்பாஸ்* (ரலி)

நூல்கள்: *முஸ்னத் அஹ்மத் 3275, ஸஹீஹ் முஸ்லிம் 1576, சுனன் இப்னுமாஜா 1892*


يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ

سورة آل عمران :(102)

*யா அய்யுஹல்ல(d)தீன ஆமனூ இத்த(q)குல்லாஹ ஹ(q)க்க(th)து(q)காத்திஹி வலா (th)தமூ(th)துன்ன இல்லா வஅன்(th)தும் முஸ்லிமூன்.*

நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வை அஞ்சுகின்ற விதத்தில் அஞ்சுங்கள்! நீங்கள் முஸ்லிம்களாகவே தவிர மரணிக்காதீர்கள்! 

(சூரா ஆலு *இம்ரான்:102* )


يَا أَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللَّهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللَّهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا     

سورة النساء:(1)


*யா அய்யுஹன்னாஸ், இத்த(q)கூ ர(b)ப்ப(k)குமுல்ல(d)தீ(kh)ஹல(q)க(k)கும் மின் நஃப்ஸிவ் வாஹி(d)தா, வ(kh)ஹல(q)க மின்ஹா ச(z)வ்ஜஹா, வ பஸ்ஸ மின்ஹுமா ரிஜாலன் கசீரவ் வ நிஸாஅ, வத்த(q)குல்லாஹல்ல(d)தீ(th)தஸாஅலூன (b)பிஹி வல்அர்ஹாம், இன்னல்லாஹ கான அலைக்கும் ர(q)கீ(b)பா.*                                  


(சூரா *அந்நிஸா : 1* )


மனிதர்களே! உங்களை ஒரே ஒருவரிலிருந்து படைத்த உங்கள் இறைவனை அஞ்சுங்கள்! அவரிலிருந்து அவரது துணையைப் படைத்தான். அவ்விருவரிலிருந்து ஏராளமான ஆண்களையும், பெண்களையும் பல்கிப் பெருகச் செய்தான். எவனை முன்னிறுத்தி ஒருவரிடம் மற்றவர்கள் கோரிக்கை வைப்பீர்களோ அந்த அல்லாஹ்வை அஞ்சுங்கள்! உறவினர்கள் விஷயத்திலும் (அஞ்சுங்கள்!) அல்லாஹ் உங்களைக் கண்காணிப்பவனாக இருக்கிறான். 


يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا

سورة الأحزاب:(70,71)


*யா அய்யுஹல்ல(d)தீன ஆமனூ, இத்த(q)குல்லாஹ், வ(q)கூலூ (q)கவ்லன் ஸ(d)தீ(d)தா, யுஸ்லிஹ்ல(k)கும் அஃமால(k)கும் வ யஃக்ஃபிர்ல(k)கும்(d)துநூப(k)கும், வமை யு(th)த்இல்லாஹ வரசூலஹு, ஃப(q)கத் ஃபா(z)ஸ ஃபவ்(z)சன் அழீமா.*


(சூரா *அல்அஹ்ஸாப்:70,71* )


33:70. நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்! நேர்மையான சொல்லையே கூறுங்கள்! அவன் உங்களுக்காக உங்கள் செயல்களைச் சீராக்குவான். உங்களுக்காக உங்களின் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுபவர் மகத்தான வெற்றி பெற்று விட்டார். 


إِنَّ أَصْدَقَ الْحَدِيثِ كِتَابُ اللَّهِ، وَأَحْسَنَ الْهَدْيِ هَدْيُ مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ مُحْدَثَةٍ بِدْعَةٌ وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ، وَكُلُّ ضَلَالَةٍ فِي النَّارِ


*ஃபஇன்ன அஸ்(d)த(q)கல் ஹ(d)தீஸி கி(th)தா(b)புல்லாஹ், வ அஹ்ஸனல் ஹ(d)த்யி ஹ(d)த்யு முஹம்ம(d)தின்)ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம்(, வஷர்ருல் உமூரி முஹ்(d)தசாத்துஹா, வ குல்லு முஹ்(d)தச(th)திம் பி(d)த்ஆ, வ குல்லு பி(d)த்அத்தின் ழளாலா, வ குல்லு ழளாலத்தின் ஃபின் நார்.*


நபி நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்:  

செய்திகளில் மிகவும் உண்மையானது அல்லாஹ்வுடைய வேதமாகும். நடைமுறையில் மிகவும் சிறந்தது முஹம்மது (ஸல்) அவர்களுடைய நடைமுறையாகும். காரியங்களில் தீயது (மார்க்கம் என்ற பெயரில்) புதிதாக உருவானவை ஆகும். புதிதாக உருவாகக் கூடியவைகள் அனைத்தும் பித்அத்துகள் ஆகும். ஒவ்வொரு பித்அத்தும் வழிகேடாகும். ஒவ்வொரு வழிகேடும் நரகத்தில் கொண்டு சேர்க்கும். 

 அறிவிப்பவர்: *ஜாபிர் (ரலி)*

நூல்: *நஸயீ 1560*,


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹூ. 


Comments