அல்லாஹ்வின் அழகிய பெயர்கள் (தமிழ் அர்த்தம்) 99
அன்பார்ந்த சகோதரர்களே..!
நாம் அல்லாஹ்வின் அழகிய பெயர்கள் (99)
மனனம் செய்து அல்லாஹ்வின் அருளை பெறக்கூடியவர்களாக நம்மை ஆக்கி அருள் புரிவானாக. ஆமீன்
அல்குர்ஆன் : 7:180
அல்லாஹ்வுக்கு அழகிய திருநாமங்கள் இருக்கின்றன ; அவற்றைக் கொண்டே நீங்கள் அவனைப் பிரார்த்தியுங்கள் , அவனுடைய திருநாமங்களை தவறாக பயன்படுத்துவோர்களை புறக்கணித்து விட்டு விடுங்கள் - அவர்களுடைய செயல்களுக்காக அவர்கள் ( தக்க ) கூலி கொடுக்கப்படுவார்கள் .
ஸஹீஹ் புகாரி : 2736
இறைத்தூதர் ( ஸல் ) அவர்கள் கூறினார்கள் : அல்லாஹ்வுக்கு நூறில் ஒன்று போக தொண்ணூற்றொன்பது திருப்பெயர்கள் உள்ளன . அவற்றை அறிந்து ( அதன் மீது நம்பிக்கை வைத்து அதை நினைவில் ) கொள்பவர் சொர்க்கத்தில் நுழைவார் . என அபூ ஹுரைரா ( ரலி ) அறிவித்தார் .
1. அர் ரஹ்மான் - الرَّحْمٰنُ - அளவற்ற அருளாளன்
2. அர் ரஹீம் - الرَّحِيمُ - நிகரற்ற அன்புடையோன்.
3. அல் மலிக் - المَلِكُ - பேரரசன்
4. அல் குத்தூஸ் - القُدُّوسُ - மிகப் பரிசுத்தமானவன்
5. அஸ்ஸலாம் - السَّلامُ - சாந்தி மயமானவன்
6. அல் முஃமின் - المُؤْمِنُ - அபயமளிக்கிறவன்
7. அல் முஹைமின் - المُهَيْمِنُ - கண்காணிப்பவன்
8. அல் அஜீஜ் - العَزِيزُ - மிகைத்தவன்
9. அல் ஜப்பார் - الجَبَّارُ - அடக்கியாள்கிறவன்
10. அல் முதகப்பிர் - المُتَكَبِّرُ - பெருமைக்குரியவன்
11. அல் காலிக் - الخَالِقُ - படைப்பவன்
12. அல் பாரிஉ - البَارِئُ - படைப்பை ஒழுங்கு படுத்துபவன்
13. அல் முஸவ்விர் - المُصَوِّرُ - உருவமளிப்பவன்
14. அல் கஃப்ஃபார் - الْغَفَّارُ - மிக்க மன்னிப்பவன்.
15. அல் கஹ்ஹார் - الْقَهَّارُ - அடக்கி ஆள்பவன்
16. அல் வஹ்ஹாப் - الْوَهَّابُ - கொடையாளன்
17. அர் ரஜ்ஜாக் - الرَّزَّاقُ - உணவளிப்பவன்
18. அல்ஃபத்தாஹ் - الْفَتَّاحُ - தீர்ப்பு வழங்குகிறவன்
19. அல் அலீம் - اَلْعَلِيْمُ - மிக அறிபவன்
20. அல் காபிள் - الْقَابِضُ - கைப்பற்றுவோன்
21. அல் பாஸித் - الْبَاسِطُ - விரிவாக்குபவன்
22. அல் காஃபிள் - الْخَافِضُ தாழ்த்துவோன்
23. அர் ராஃபிஃ - الرَّافِعُ - உயர்த்துவோன்
24. அல் முஇஜ்ஜு - الْمُعِزُّ - கண்ணியப்படுத்துவோன்
25. அல் முதில்லு - المُذِلُّ - இழிவடையச்செய்பவன்
26. அஸ்ஸமீஉ - السَّمِيعُ - செவியேற்பவன்
27. அல் பஸீர் - الْبَصِيرُ - பார்ப்பவன்
28. அல் ஹகம் - الْحَكَمُ - தீர்ப்பளிப்பவன்
29. அல் அத்லு - الْعَدْلُ - நீதியுள்ளவன்
30. அல் லதீஃப் - اللَّطِيفُ - நுட்பமாகச் செய்கிறவன்
31. அல் ஃகபீர் - الْخَبِيرُ - நன்கறிகிறவன்
32. அல் ஹலீம் - الْحَلِيمُ - சகிப்புத் தன்மையுடையவன்
33. அல் அழீம் - الْعَظِيمُ - மகத்துவமிக்கவன்
34. அல் கஃபூர் - الْغَفُورُ - மிகவும் மன்னிப்பவன்
35. அஷ் ஷகூர் - الشَّكُورُ - நன்றி பாராட்டுபவன்
36. அல் அலிய்யு - الْعَلِيُّ - மிக உயர்ந்தவன்
37. அல் கபீர் - الْكَبِيرُ - மிகப்பெரியவன்
38. அல் ஹஃபீழ் - الْحَفِيظُ - பாதுகாவலன்
39. அல் முகீத் - المُقيِت - ஆற்றல் உள்ளவன்
40. அல் ஹஸீப் - الْحسِيبُ - கணக்கெடுப்பவன்
41. அல் ஜலீல் - الْجَلِيلُ - கண்ணியமானவன்
42. அல் கரீம் - الْكَرِيمُ - தயாளன்
43. அர் ரகீப் - الرَّقِيبُ - கண்காணிப்பவன்
44. அல் முஜீப் - الْمُجِيبُ - பதிலளிப்பவன்
45. அல் வாஸிஃ - الْوَاسِعُ - விசாலமானவன்
46. அல் ஹகீம் - الْحَكِيمُ - ஞானமுடையோன்
47. அல் வதூத் - الْوَدُودُ - பிரியமுடையவன்
48. அல் மஜீத் - الْمَجِيدُ - மகிமை வாய்ந்தவன்
49. அல் பாஇத் - الْبَاعِثُ - உயிர்த்தெழச் செய்பவன்
50. அஷ் ஷஹீத் - الشَّهِيدُ - சாட்சியாளன்
51. அல் ஹக் - الْحَقُّ - உண்மையானவன்
52. அல் வகீல் - الْوَكِيلُ - பொறுப்பேற்பவன்
53. அல் கவிய்யு - الْقَوِيُّ - வலிமை மிக்கவன்
54. அல் ம(த்)தீன் - الْمَتِينُ - உறுதியானவன்
55. அல் வலிய்யு - الْوَلِيُّ - பாதுகாவலன்
56. அல் ஹமீத் - الْحَمِيدُ - புகழுக்குரியவன்
57. அல் முஹ்ஸி - الْمُحْصِي - கணக்கிட்டு வைப்பவன்
58. அல் முப்திஉ - الْمُبْدِئُ - துவங்குவோன்
59. அல் மூஈத் - الْمُعِيدُ - மீளச்செய்பவன்
60. அல் முஹ்யீ - الْمُحْيِي - உயிர்ப்பிக்கிறவன்
61. அல் முமீத் - اَلْمُمِيتُ - மரணிக்கச் செய்பவன்
62. அல் ஹய்யு - الْحَيُّ - நித்திய ஜீவன்
63. அல் கய்யூம் - الْقَيُّومُ - நிலைத்திருப்பவன்
64. அல் வாஜித் - الْوَاجِدُ - என்றும் இருப்பவன்
65. அல் மாஜித் - الْمَاجِدُ - மகிமை வாய்ந்தவன்
66. அல் வாஹித் - الْواحِدُ - ஏகன்
67. அல் அஹத் - اَلاَحَدُ - ஒருவன்
68. அஸ் ஸமத் - الصَّمَدُ - தேவையற்றவன்
69. அல் காதிர் - الْقَادِرُ - சக்தியுள்ளவன்
70. அல் முக்ததிர் - الْمُقْتَدِرُ - ஆற்றலுடையவன்
71. அல் முகத்திம் - الْمُقَدِّمُ - முற்படுத்துவோன்
72. அல் முஅக்ஃகிர் - الْمُؤَخِّرُ - பிற்படுத்துவோன்
73. அல் அவ்வல் - الأوَّلُ - முதலாமவன்
74.அல் ஆகிர் - الآخِرُ - கடைசியானவன்
75. அழ் ழாஹிர் - الظَّاهِرُ - மேலானவன்
76. அல் பா(த்)தின் - الْبَاطِنُ - அந்தரங்கமானவன்
77. அவ்வாலீ - الْوَالِي - உதவியாளன்
78. அல் முதஆலீ - الْمُتَعَالِي - மிக உயர்ந்தவன்
79. அல் பர்ரு - الْبَرُّ - நன்மை செய்கிறவன்
80. அத் தவ்வாப் - التَّوَابُ - பாவ மன்னிப்பை ஏற்பவன்
81. அல் முன்தகிம் - الْمُنْتَقِمُ - தண்டிப்பவன்
82. அல் அஃபுவ்வு - العَفُوُّ - மன்னிப்பவன்
83. அர் ரஊஃப் - الرَّؤُوفُ - இரக்கமுடையவன்
84. மாலிகுல் முல்க் - مَالِكُ الْمُلْكِ - ஆட்சிக்கு அதிபதி
85. துல்ஜலாலிவல் இக்ராம் -
ذُوالْجَلاَلِ وَالإكْرَامِ - கண்ணியமும் சங்கையும் உள்ளவன்
86. அல் முக்ஸித் - الْمُقْسِطُ - நீதியானவன்
87. அல் ஜாமிஃ - الْجَامِعُ - ஒன்று சேர்ப்பவன்
88. அல் கனிய்யு - الْغَنِيُّ - தேவையற்றவன்
89. அல் முக்னீ - الْمُغْنِي - தேவையற்றவனாக்குவோன்
90. அல் மானிஃ - اَلْمَانِعُ - தடுப்பவன்
91. அள் ளார்ரு - الضَّارَّ - இடரளிப்பவன்
92. அன் நாஃபிஃ - النَّافِعُ - நற் பயனளிப்பவன்
93. அன் நூர் - النُّورُ - ஒளியானவன்
94. அல் ஹாதி - الْهَادِي - நேர்வழி காட்டுபவன்
95. அல் பதீஉ - الْبَدِيعُ - முன்மாதிரியின்றி படைப்பவன்
96. அல் பாகீ - اَلْبَاقِي - நிலையானவன்
97. அல் வாரித் - الْوَارِثُ - அனந்தரம் பெறுவோன்
98. அர் ரஷீத் - الرَّشِيدُ - நேர்வழி காட்டுவோன்
99. அஸ் ஸபூர் - الصَّبُورُ - பொறுமையுள்ளவன்
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹூ
அஸ்ஸலாமு அலைக்கும்
ReplyDeleteஅரபியிலும் எழுதினால் நல்லது
ங என்பதற்கு பதிலாக வேறு எழுத்துகள் பாவிக்க முடியாதா?
வ அலைக்கும் ஸலாம் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹூ. ஜஸகல்லாஹு கைய்ரு. அரபியில் சேர்த்துள்ளோம். ங என்பதற்கு க சேர்த்துள்ளோம்.
Deleteஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹூ
Alhamdulillah...
ReplyDeleteஇதை ஓதுவதால் எண்ணநண்மை விளக்கம் தாருங்கள் முகமது சித்தீக் 9842995117
Deleteஅல்லாஹ்வை நினைவு கூர்வதால் அவர்களுடைய இதயங்கள் அமைதி பெறுகின்றன; அல்லாஹ்வை நினைவு கூர்வது கொண்டு தான் இதயங்கள் அமைதி பெறுகின்றன என்பதை அறிந்து கொள்க!
Delete(அல்குர்ஆன் : 13:28)
இறைத்தூதர் ( ஸல் ) அவர்கள் கூறினார்கள் : அல்லாஹ்வுக்கு நூறில் ஒன்று போக தொண்ணூற்றொன்பது திருப்பெயர்கள் உள்ளன . அவற்றை அறிந்து ( அதன் மீது நம்பிக்கை வைத்து அதை நினைவில் ) கொள்பவர் சொர்க்கத்தில் நுழைவார் . என அபூ ஹுரைரா ( ரலி ) அறிவித்தார் .
Deleteமாஷா அல்லாஹ் இப்பெயர்களின் அர்த்தத்தை வாசிக்கும் போது உள்ளச்சம் ஏற்படுகின்றது. ஜஸாகல்லாஹு கய்ரா
Deleteஅல் ஜாமிஃ (ஃ) எப்படி உச்சரிப்பது
Deleteஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹூ.
Deleteஅல் ஜாமிஃ - ஃ அடித் தொண்டை யிலிருந்து உச்சரிக்க வேண்டும். Audio file comment இல் செய்ய இயலாது. ஆகவே தாங்கள் 99 names of Allah.. Audio மூலம் சரியான உச்சரிப்பை தெரிந்து கொள்ளுங்கள்.
(உள்ளச்சமுடைய) அவர்கள்தாம், “திடமாக (தாம்) தங்கள் இறைவனைச் சந்திப்போம்; நிச்சயமாக அவனிடமே தாம் திரும்பச்செல்வோம்” என்பதை உறுதியாகக் கருத்தில் கொண்டோராவார்.
ReplyDelete(அல்குர்ஆன் : 2:46)
Jazakallah Khairujn kasiran
ReplyDeleteAlhamdulilah masha allah
ReplyDeleteஅருமையான பதிவு நிறைய இஸ்மு அர்த்தம் இல்லாமல் ஓதியுள்ளேன். அர்த்தமுடன் இனி ஓதுவதற்கு இதை அனுப்பியதற்கு மிக்க மகிழ்ச்சி மிக்க நன்றி
ReplyDeleteMasha allah…Good initiative
ReplyDeleteAllahu akbar
ReplyDeleteMashaallah
ReplyDeleteMashaallah
ReplyDeleteMasha allah
ReplyDelete